தமிழ்நாடு கிரிகெட் அணியை! வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வேன்! அசோக் சிகாமணி தகவல்!!
- உறியடி செய்திகள்

- Nov 6, 2022
- 1 min read

தமிழ்நாடு கிரிகெட் அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வேன், அதன் தலைவர் அசோக்சிகாமணி உறுதி!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோர்சிகாமணி,போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் .....
அசோக் சிகாமணி. விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவராகவும் பணியாற்றியவரார்.
இந்திலை யில், தமிழ்நாடு கிரிகெட் சங்கத்தின் தலைவராகபோட்டியின்றி அசோக் சிகாமணிதேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழனியும், பொருளாளராக ஸ்ரீனிவாச ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர். பிரபு தலைமையிலான எதிரணி போட்டியாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்றதால் செயலாளர், பொருளாளரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
2019-ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் மகள் ரூபா தேர்வு செய்யப்பட்டார். நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் முக்கியமான பொறுப்புகளில் இருந்துவரும் அசோக் சிகாமணி, அப்போதே தலைவர் பதவிக்கு முயற்சி செய்தார். ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை ஸ்ரீனிவாசன்துணைத்தலைவராக்கினார்
. இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
இதன் பின்னர் அவர். தமிழக கிரிகெட் அணியை, பள்ளி. கல்லூரி மாணவர்களுக்கும் போதிய ஆர்வத்தையும், ஊத்துவித்து மேலும்பலப்படுத்தி, ரஞ்சித்கோப்பை உள்ளிட்ட பல போட்டிகளின் கோப்பைகளை பெறச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்......
இவ்வாறாக அவர் கூறினார்.
அதன்பின்னர், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் பெற்றார்.......
. தமிழ்நாடு கிரிகெட் சங்கத்தின் தலைவரான அசோக்சிகாமணி, தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர். விழுப்புரம் மாவட்ட செயலாளர், தமிழ்நாடு உயிர் கல்வித்துறை அமைச்சர் பேரா.க.பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடதக்கது.....
வாழ்த்துக்கள் சாதனைகள் பல படைக்க!




Comments