டாஸ்மாக்கும்- பா.ஜ.க அரசியலும்! அவர்கள் மூடத் தயாரா? வலுக்கும் எதிர்ப்புகள்! பகீர் தகவல்கள்!
- உறியடி செய்திகள்

- Jul 16, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா
அரசு மதுக்கடைகள் விவகாரம்! அரசியலா செய்கிறார்அண்ணாமலை!
டாஸ்மாக்கும்- பா.ஜ.க அரசியலும்! அவர்கள் மூடத் தயாரா? வலுக்கும் எதிர்ப்புகள்! பகீர் தகவல்கள்!
நாட்டில் அதிக மதுக்கடைகளை வைத்திருப்பதும்,அதன் மூலம் அதிக வருமானம் பார்ப்பதும் உத்தரப் பிரதேச பாஜக அரசுதான்.யோகி முதல்வரான பின் புதிதாக 2706 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.!
ஆனால் தமிழ்நாட்டில் கடந்த மாதம் மட்டும் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளது.!
மதுவிலக்கு அமலில் உள்ள #பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடக்கிறது.!
இதேபோல்,பாஜக ஆளும் மாநிலங்களில் மதுவிற்பனை படுஜோராக நடக்கிறது.
மகாராஷ்டிராவில் கடந்த
நிதியாண்டில் ரூ.17,177.19 கோடி
புதுச்சேரியில் ரூ.1063 கோடி
அரியானாவில் ரூ.7938 கோடி
உத்தரகாண்டில் ரூ.247.6 கோடி
அசாமில் ரூ.2031.33 கோடி
அருணாச்சல் பிரதேசத்தில் ரூ.163.42 கோடி
கோவாவில் ரூ.500 கோடி
மேகாலயாவில் ரூ.300 கோடி
என பாஜக ஆளும் அரசுகள் மது விற்பனை மூலம் ரூ.1 லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.!
மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு மது விற்பனைக்கு வரி செலுத்துகிறது.
எனவே அண்ணாமலை Excel sheet planனை ஒன்றிய அரசுக்கு கூறி அவர்கள் ஆளும் மாநிலங்களுக்கு முதலில் அமல்படுத்த சொல்லுங்கள். என்கிற எதிர் குரல்களும் வலுத்துவருகிறது.!
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து மூடி வருவதுடன், இதற்கு முன்னர் கூறப்பட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை துரிதபடுத்திட, திட்டமிட்டு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்!
உறியடி செய்திக்குழு




Comments