top of page
Search

தலைமைச்செயலகத்தில் சோதனை! அரசியல் ரீதியாக முடியாமல்! புறவாசல் வழியாக மிரட்டல்! முதல்வர் அறிக்கை!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 13, 2023
  • 2 min read
ree

மணவை எம்.எஸ்.ராஜா.....

மே.13. 11.P.M.


தலைமை செயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


. தமிழக வரலாற்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அறையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ree

மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ree

பொதுவாக அரசியல் தலைவர்கள், அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடப்பது வழக்கமான ஒன்று ஆனால் மாநிலத்தின் அதிகார மையமாக திகழும் தலைமை செயலகத்தில் சோதனை நடத்துவது என்பது ஆளும் அரசிற்கு சங்கடத்தை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.

இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக அரசியல் வரலாற்றில் அரிதாக நடக்கக்கூடியது. கடந்த அதிமுக ஆட்சியில் தலைமை செயலாளராக ராம மோகன் ராவ் இருந்த போது 2016.டிச.21. அன்று அவரது வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது. அதன்பிறகு தலைமை செயலகத்தில் அவரது அறையில் சோதனை நடந்தது.

ree

இந்நிலையில் இரண்டாவது முறையாக தலைமை செயலகத்தில் ரெய்டு நடவடிக்கைகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் அரங்கேறியுள்ளது. இந்த சோதனையில் அமலாக்கத்துறை, இந்தியன் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான ஆவணங்களை எடுத்து கொடுக்கும் வகையில் அமைச்சரின் உதவியாளர்கள் அறையில் இருக்கின்றனர்.

தற்போது அமைச்சரின் அறைக்கு உள்ளே தாளிட்டு கொண்டு சோதனை நடைபெற்று வருகிறது .

தலைமைச் செயலகத்திற்குள்ளும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

.

ree


அதே சமயம், ஒன்றிய பா.ஜ. அரசு பழிவாங்கும்இதே நிலையினை தொடர்ந்தால், ஒன்றிய அமைச்சர்கள் மாநிலத்திலிருந்து தேர்வாகி போனவர்கள்தான்! அவர்களின் மீதான புகார்களின் பேரில், மாநில அரசு உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பிற துறைகளும் எதிர் நடவடிக்கையினை தொடர்ந்தால் கூட்டாட்சி தத்துவம் - அரசியலமைப்பு சட்டம், இவற்றின் மாண்பு கேலி கூத்தாக்கிவிடுமே என்கிற விபரமறிந்தவர்களின் பேச்சுக்களை யும் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது என்பதே பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது!


யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம்…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!


அமலாக்கத்துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது ஆகும்.

ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா?

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2016-ஆம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் அவர்களது வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. “தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு - கூட்டாட்சி பேசிக் கொண்டே அந்த தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது ஒன்றிய அரசு.

ree

இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது" என்று, அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன்.

ree

எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத்தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பா.ஜ.க. உருவாக்கி வருகிறது.

பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ree

அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும்.

அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.


தலைமைச்செயலகத்தில் மீண்டும் தி.மு.கழக அரசை வாங்கவேண்டும் என்கிற உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறையை ஏவி விட்டு, மிரட்டும் வகையில் சோதனையில் ஈடுப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தேசிய தமிழக கூட்டணி கட்சித் தலைவார்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்...


அதே சமயம், ஒன்றிய பா.ஜ. அரசு பழிவாங்கும்இதே நிலையினை தொடர்ந்தால், ஒன்றிய அமைச்சர்கள் மாநிலத்திலிருந்து தேர்வாகி போனவர்கள்தான்! அவர்களின் மீதான புகார்களின் பேரில், மாநில அரசு உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பிற துறைகளும் எதிர் நடவடிக்கையினை தொடர்ந்தால் கூட்டாட்சி தத்துவம் - அரசியலமைப்பு சட்டம், இவற்றின் மாண்பு கேலி கூத்தாக்கிவிடுமே என்கிற விபரமறிந்தவர்களின் பேச்சுக்களையும் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது என்பதே பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது!

'

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page