சென்னை, கோவை, திருச்சியிலும், ஜிஸ் கொயர் நிறுவனத்தில் சோதனை! தொழில் காழ்ப்புணர்ச்சி காரணமா?
- உறியடி செய்திகள்

- Apr 24, 2023
- 1 min read

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட ஜி.ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை!
தொழில் காம்ப்புணர்ச்சி காரணம், ஜி.ஸ்கொயர் ......
அந்த வகையில் திருச்சி ஒத்தக்கடை டேப் காம்ப்ளக்ஸில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வந்தனர் - அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் அதிகாரிகள் காத்திருந்தனர்.
அப்போது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரிடம் தொலைபேசி மூலம் எப்போது திறக்கப்படும் என விசாரித்தனர்.
அப்போது ஊழியர் ஒருவர் வந்து கதவை திறப்பதை கண்ட உடன் அதிகாரிகள் உடனடியாக அவரை விசாரித்தனர். பின்னர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று ஆவணங்களை பார்த்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவனைக்காவில் அடுத்துள்ள கொண்டையம்பேட்டை பகுதியில் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடமும், திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள பிளாட்டுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், சென்னை கோவை உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
தொழில் போட்டி, காழ்ப்புணர்ச்சி காரணமாக, திட்டமிட்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக நிறுவனத்தகவல்கள் கூறுகின்றது.




Comments