தளபதியார் தலைமை தி.மு.கழகம் அழகிய தேன்கூடு! சாது மிரண்டால் தாங்க இயலாது! வழக்கறிஞர் கணேஷ்பாண்டியன்
- உறியடி செய்திகள்

- Jun 16, 2023
- 1 min read
Updated: Jul 22, 2023

மூத்த பத்திரிக்கையாளர், மணவை எம்.எஸ்.ராஜா.
ஜூன்.16. 12.10. P.M.
தி.மு.கழகம், கோடிக்கணக்கான இன உணர்வுமிக்கு தொண்டர்கள் நிறைந்த ஒரு தேன்கூடு, சனாதன பிரிவினை, எண்ணம் கொண்டு தொட நினைக்காதீர்கள். அப்படி நினைத்தவர்கள் அடையாளமில்லாமல் போன வரலாறு இந்திய ஒன்றிய களத்தில் பல உண்டு!
தமிழர்களின் இலக்கிய வரலாற்றில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்கிற முதுமொழிக்கான அர்த்தங்களை எண்ணிப்பார்க்க மறவாதீர்கள்!
தென்சென்னை மாவட்ட,தி.மு.கழக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் கணேஷ்பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது!

சமுக நீதீ , சம உரிமை ஜனநாயகம் காக்கும் இயக்கம்கழகம் .இப்படி திராவிட, உலக தமிழ் மக்களின் உயிரோடும் உணர்வோடும் இரண்டரை கலந்துவிட்ட தி.மு.கழகத்தை அழிக்கவோ , அடக்கவோ எந்தவித ஆதிக்க சனாதான, பிரிவினைவாத சிந்தனை கொண்ட எவராலும் முடியாது.
ஜனநாயகமுறையில் தேர்ந்து எடுக்கப்பட்ட, கழகத் தலைவர், முதல்வர்,தளபதியார் தலைமையிலான கழகத்தால் அடையாளம் காட்டப்பட்டு, மக்களின் அங்கிகாரத்தோடு தமிழ் நாட்டு அரசின் அமைச்சர் மீது அமலாக்கத்துறையின் அத்துமீறிய மனித உரிமை மீறல் செயல்களால் அமைச்சர்களின், தி.மு.கழகத்தினரின் மக்கள் பணிகளைகளோ, கழகத்தின் வளர்ச்சிகளை களோ அடக்கி, ஒடுக்கி அடாவடித்தன அரசியல் செய்துவிடலாம் என்கிற போக்கு இனி தமிழ்நாட்டில். எங்கள் தலைவர் தளபதியார் முன் கானல்நீராகத்தான் போகும்.
இவர்களின் பிரிவினைவாத, தமிழர்கள் விரோத, மாநில சுயாட்சிகளை முடக்கிடும்போக்கு, போன்ற மக்கள் விரோத செயல்களுக்கு காலம் கூடிய விரைவில் பதில் சொல்லும்.
'
அமலாக்கத்துறை, சி.பி.ஐ.தனி அமைப்புகள். அதை தங்கது கட்டளையை ஏற்காத, மக்கள் இயக்கங்களை பழி வாங்கும் ஏவல் துறைகளாக மாற்ற முயலாதீர்கள்.
இதற்கான பாடத்தைத்தான், கர்நாடகம், ஆந்திர, கேரளா, உள்ளிட்ட வட மாநிலங்கள் உள்ளிட்ட, இந்திய ஒன்றியத்தின் மாநில மக்கள் உணர்த்தி வருகின்றார்கள்!
காலத்தை வெல்லும் சக்தி தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை முழக்கங்கங்களை தாங்கி, தமிழர்களின் தன்னிகரற்றத் தலைவராய் தி.மு.கழகத்தினரை,தி.மு.கழகத்தை வழிநடத்தும், எங்கள் தலைவர், முதல்வர் தளபதியாருக்கு உண்டு என்பதை மறவாதீர்கள்!

கழகம் காக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் சுண்டு விரல் அசைவினை எதிர்பார்த்து தமிழினம் காத்தி நிற்கின்றது. அப்படிப்பட்ட மொழி இன உணர்வு. தமிழர்களின் உரிமைகளை காத்து ஒரு குடையின் கீழே காத்து நிற்கும் உணர்வு கொண்ட மக்கள் நிறைந்த காலம் என்பதையும் நினைவில் வையுங்கள்!
தி.மு.கழகம், கோடிக்கணக்கான இன உணர்வுமிக்க தொண்டர்கள் நிறைந்த ஒரு அழகிய தேன்கூடு, சனாதன பிரிவினை, எண்ணம் கொண்டு சீண்ட நினைக்காதீர்கள்.
அப்படி நினைத்தவர்கள் அடையாளமில்லாமல் போன வரலாறு இந்திய ஒன்றிய களத்தில் பல உண்டு!.
தமிழர்களின் இலக்கிய வரலாற்றில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்கிற முதுமொழிக்கான அர்த்தங்களை எண்ணிப்பார்க்க மறவாதீர்கள்!
இவ்வாறாக அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.




Comments