கலைஞரின் மகளீர் உரிமை தொகை திட்டம்! தகுதியுள்ளஒருவர்கூட விடுப்படக்கூடாது! அமைச்சர்உதயநிதி ஸ்டாலின்!
- உறியடி செய்திகள்

- Jul 25, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா...
முத்தமிழறிஞர் கலைஞர் மகளீர் உரிமைத் தொகை திட்டம்.! விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணிகள் தீவிரம்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
இணைய சேவை உள்ளிட்ட தொழில்நுட்ப. வசதிகளை தயார் நிலையில் வைத்திருந்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்திடவும்,தகுதியுள்ள ஒரு பயனாளி கூட விடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கோடு செயல்பட வேண்டுமெனவும் அரசு துறை அலுவலர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அறிவுறுத்தல்!
மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் மகத்தான திட்டமாக
தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்த செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் தி.மு. கழக அரசு செயல்படுத்தவுள்ளது!.

இதற்கான விண்ணப்ப பதிவுகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, பணியில் ஈடுபடும் அரசுத்துறை அதிகாரிகள்ஆலோசனைகள், வழிகாட்டல்கள்களை வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இப்பணிகளை. அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், உரியமுறையில் நேரில் சென்று ஆய்வு செய்திடவும், மகளீர் உரிமைத்தொகை பெற விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தருவதற்காக வரும். மகளீருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசியல் பாகுபாடுகளின்றி செய்துதர வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.!
இந் நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாமினை இன்று தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்!

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த, அரசு துறை அதிகாரிகளிடம், இணையதள சேவை உள்ளிட்ட தொழில்நுட்ப. வசதிகளை தயார் நிலையில் வைத்திருந்து முத்தமிழறிஞர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்திடவும்,தகுதியுள்ள ஒரு பயனாளி கூட விடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கோடு செயல்பட வேண்டுமெனவும் அங்கிருந்த அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்...




Comments