நீர்நிலைகளை மேம்படுத்திட முதல்வர் தனி கவனம்! அமைச்சர் மெய்யநாதன் தகவல்!!
- உறியடி செய்திகள்

- May 3, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா.
தமிழ்நாட்டில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நீர்நிலைகளை மேம்படுத்துவதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராமத்தில் உள்ள செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று மே 3. புதன்கிழமைதுவக்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.சி.மெய்யநாதன் கூறியதாவது:.
தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.கழகத்தலைவர் தளபதியாரின் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்கின்ற இலட்சியத்தின் அடிப்படையில், திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகின்றார். இந்நிலையில் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் நீர் நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் இன்றையதினம் செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி தமிழக முதல்வரின் உத்தரவின்படி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராம எல்லையில் ஆரம்பமாகி 2,500 மீட்டர் நீளமுடன் மாத்தூர் எரியில் முடிவடைகிறது. இதன்மூலம் 88.02 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும்.
மேற்கண்ட வடிகால் வாய்க்கால் மிகவும் தூர்ந்தும், பக்க சரிவுகளில் மண் மேடிட்டும், காட்டாமணக்கு செடி கொடிகள் வளர்ந்து இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் விரைந்து வடிவதற்கு தடை ஏற்படுகிறது. இந்நிகழ்வால் விவசாயிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து இவற்றை தவிர்க்கும் பொருட்டு, செங்கலநீர் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் இயந்திரம் மூலம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் .இவ்வாறாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார்.....
மாவட்ட ஆட்சித் தலைவர், கவிதா ராமு.வருவாய் கோட்டாட்சியர் .சு.சொர்ணராஜ், உதவி செயற்பொறியாளர் க.சண்முகம், உதவிப் பொறியாளர் இரா.செந்தில்குமார், ஊராட்சிமன்றத் தலைவர் .சசிகலா கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் .சரிதா மேகராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் உத்தமநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

இதனை தொடர்ந்து,
கொத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டியதுடன். மேலும் சேந்தன்குடியில் புதிய மின்மாற்றி துவக்கி வைத்தார்.....
துணை ஆட்சியர் (பயிற்சி).ஜி.வி.ஜெயஸ்ரீ, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்




Comments