மக்களுக்கானதிட்டங்களை, முதல்வர் ஒரு தந்தைப்போலகவனமுடன்செயல்படுத்துகிறார்!அமைச்சர் காந்தி பெருமிதம்!
- உறியடி செய்திகள்

- Apr 27, 2023
- 2 min read


ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா...
தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து திட்டங்களையும், அனைத்துத்தரப்பு மக்களின் தேவைகளையறிந்து ஒரு தந்தையைப் போல் நேரடி-தனி கவனத்துடன்செயல்படுத்தி வருகின்றார்! அமைச்சர் ஆர்.காந்தி பெருமிதம்!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏப்.27. வியாழக்கிழமை காலை முதலாக
பல்வேறு பகுதிகளில் அரசு துறைகளின் சார்பில் 1782 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 14 இலட்சத்து 39 ஆயிரத்து 784 மதிப்பிலான நல திட்ட உதவிகளை தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உத்தரவு, அறிவுறுத்தலின்படி. ராணிபேட்டை மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தார்.


கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியில் தளி ஹட்கோவில், காந்திநகர், கிருஷ்ணா நகர், டைட்டான்டவுன் சிப், கொத்தக் கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் புதிய ரேசன்கடைகளை திறந்துவைத்தார்.தொடர்ந்து சூளகிரி ஒன்றியத்தில் ரூ.8 கோடி செலவில் சாலை அகலப்படுத்தும் பணியையும், தேன்கனிக்கோட்டை, சந்தனப்பள்ளியில் ௹.14.74. கோடியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி புதிய கட்டுமானப் பணிகளையும் துவக்கிவைத்தார். முன்னதாக ஒசூர் காந்திநகர் பகுதி புதிய ரேசன்கடையை திறந்துவைத்து, 10 பயணாளிகளுக்கு உதவித்தொகைப் பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து விழாக்களில் பேசிய ராணிபேட்டை தி.மு.கழக மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்,
எல்லோருக்கும் எல்லாம் என்கிற இலக்கின் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆற்றிய மக்கள் பணிகளை மனதில் நிறுத்தி திராவிட மாடல் ஆட்சியை தமிழக மக்கள் வளம்பெற, கல்வி. சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தொழிலாளர்கள் தொழில்முனைவோர் நலன், கிராம மக்கள் பெண்கள் வாழ்வாதாரம், பெண்கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறார்.
உரிய காலக்கெடுவுக்குள் பணிகளை மக்களுக்கு பயன்தரும் வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்று இரவு-பகல் பாராது அயராத பணியாற்றி வருகின்றார். அந்தவகையில் மண்டல அளவில் அரசு நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று உரிய மண்டல அளவிலானஆய்வுப் பணிகளையும் மேற்க்கொண்டுவருவதுடன் தேவையான ஆலோசனைகள் - அறிவுறுத்தல்களையும் வழங்கி பணிகளை தாமே நேரடியாக முடுக்கிவிட்டும் வருகின்றார்.
மக்களின் கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவேண்டும் என்று அனைத்துத்துறைகளிலும் மக்கள்நலத்திட்டங்களை, ஒரு தந்தைப் போல மிகவும் கவனமுடன், தனி கவனத்துடன், அக்கரையுடன் , தனது நேரடி பார்வையில்
செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
திட்டப்பணிகளின் தரம், உரிய நேரத்தில் திட்டப்பணிகளை முடித்து மக்களுக்கு பயணளிக்கும் வகையில் அர்ப்பணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமளிக்காாமல் தனி கவனத்துடன் தனது நேரடி பார்வையில் அனைத்துத்துறை திட்டப் பணி செயல்களையும் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறார்.
எனவே முதல்வர் தளபதியாரின் மக்கள் நலன் சார்ந்தசிந்தனைகளை உள்வாங்கி அதற்கேற்ப திட்டப் பணிகளை உரிய தரத்தோடு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்க்குள் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவகையில் செய்துமுடிக்க வேண்டும்.
இவ்வாறாக அவர் கூறினார்.


கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன்., நாடாளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள், மேற்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்,பிரகாஷ், ராமச்சந்திரன், கலெக்டர் தீபக் ஜேக்கப்' மேயர் சத்யா, ஆணையர், சினேகா, மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.கழக நிர்வாகிகள், மாவட்ட துணை செயலாளர்கள், தலைமை செயற்குழு, மாவட்ட பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழ, ஒன்றிய குழு, பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர், கவுன்சிலர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், ஏராளமானபொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.




Comments