top of page
Search

தமிழ்நாட்டுமாணவர்களின்நீட்விலக்கில்!எடப்பாடியின் இரட்டை வேடம்!! பரப்பரப்பு தகவல்கள்!!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Feb 24, 2023
  • 1 min read
ree


நீட் தேர்வுக்கு எதிரான மனுவை தமிழ்நாடு அரசு ஏன்?திரும்ப பெற்றது.எடப்பாடியின் பா.ஜ. ஆதரவு நிலைப்பாட்டுடன். தன் சுயலாத்திற்காகவும், அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டது. இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இது குறித்த முக்கிய விளக்கம் அவசியப்படுகிறது.

முந்தை அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக *ரிட் மனுவை* தாக்கல் செய்தது.

இது வழக்கை.. வலுவிழக்கச் செய்யும்..

உண்மையில் அரசின் கொள்கை முடிவிற்கு எதிராக orginal suit தான் தாக்கல் செய்ய வேண்டும்.

அதனால் தான் தற்போதைய திமுக அரசு ஒரிஜினல் சூட் தாக்கல் செய்துள்ளது..

முந்தைய ரிட் மனுவை திரும்ப பெற அரசு கோரிக்கை வைத்த போது.. நீதிபதி அஜய் ரஸ்தோகி இந்த விவகாரத்தில் ஏன் ரிட் மனு தாக்கல் செய்தீர்கள் என கேட்டார். முந்தைய அரசு தான் என சொன்னவுடன்.. திரும்ப பெற அனுமதியும் வழங்கினார்.

தனக்காக, தன் கட்சிக்காக வாதாடி நீதிமன்றத்தில் வெல்ல தெரிந்த எடப்பாடிக்கு..

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிராக உள்ள நீட் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாது தவறாக தாக்கல் செய்திருந்த வழக்கினை...

இன்று தி.மு.கழக அரசு திரும்ப பெற்று நீட் தேர்வு எதிராக முறையான வழக்கினை தாக்கல் செய்துள்ளது! என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்கிற கேள்வி எழுவது இயற்கையாக கருத வேண்டியுள்ளது.


அதிமுகவை பொறுத்தவரை.. நீட் எதிர்ப்பு என்பது வெறும் கண் துடைப்பு நாடகமே.


திமுகவிற்கோ அது கொள்கை ரீதியான எதிர்ப்பு. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கரை கொள்ளாமல், போதிய அரசு நிர்வாக திறனிலில்லாமல், பா.ஜ.வின் அடிமைகளாக தவறுக்கு மேல் தவறாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப்பெற்றது தி.மு.கழக அரசு.

இனி #NEET தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் அதே தீவிரத்துடன் தொடர்ந்து சட்டத்தின் வாயிலாக வெற்றி பெறும்.

என்றே கல்வியாளர்கள் அரசியல் பார்வையாளர்களாால் கருதப்படுகிறது.


அதேசமயம். தமிழ்நாட்டு மாணவர்களின் நீட் விலக்கு கோரிய விசயத்தில் எடப்பாடி-பா.ஜ.வுக்கு ஈரோடு இடைத்தேர்தல் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்கிற தகவலும் பரப்பரப்பாக பேசப்படுகிறது,


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page