top of page
Search

கல்வி கட்டணம் அறிவித்தது அரசு! அதிர்ச்சியில் தனியார் பள்ளி நிர்வாகங்கள்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 27, 2023
  • 1 min read
ree

பத்திரிக்கையாளர் ராஜா...


அடுத்த 3 ஆண்டுகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம்..! தமிழக அரசு உத்தரவால் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் அதிர்ச்சி!


தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய கட்டண விகிதங்களை நிர்ணயத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த கட்டண நிர்ணயம் தனியார் பள்ளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை 25 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுதோறும் இந்தத் திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர்.

கல்வி உரிமைச் சட்டப்படி எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து கல்வி நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டு வரை கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கடந்த கல்வி ஆண்டை காட்டிலும் கட்டண விகிதத்தை தமிழக அரசு சற்றே உயர்த்தியுள்ளது. எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 12 ஆயிரத்து 76 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், புதிய கட்டண விகிதப்படி12 ஆயிரத்து 659 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகின்றது!


இதனால் 6 முதல் எட்டாம் வகுப்பு வரை பழைய கட்டணம் 15 ஆயிரத்து 711 ரூபாய் ஆக இருந்த நிலையில், புதிய கட்டணம் 16 ஆயிரத்து 477 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கட்டண நிர்ணய அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!

தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தில் பாதியைத் தான் அரசு, கட்டாய கல்வி சட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு ஒதுக்குகிறது. இதனால், கூடுதல் கட்டணத்தை பெற்றோரிடம் இருந்து வாங்கும் சூழல் ஏற்படுகிறது என தனியார் பள்ளிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page