முதல்வர் அறிவித்த திட்டங்கள், அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு விரைந்து முடித்திட அறிவுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- Jan 4, 2023
- 1 min read

மணவை.எம்.எஸ்.ராஜா...
சட்டமன்ற நிதியாண்டு,மானிய கோரிக்கையின் போது முதல்வர் .மு.க.ஸ்டாலின்110. விதிகளின் கீழ்அறிவித்த திட்டங்கள் குறித்து அமைச்சர்.கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் தி.மு.கழக அரசு.தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றபின்னர் அனைத்து அரசுத்துறைகளின் நலப்பணிகள், திட்ட, வளர்ச்சிப் பணிகள் விரைந்து, துரதமாக செயல்படுத்தி வருகின்றது. கடந்த 2021 - 2022, 2022-2023, நிதிஆண்டுகளில் மானிய கோரிக்கையில், முதல்வர் .மு. க.ஸ்டாலின் பல்வேறு துறைசார்ந்து 110 விதிகளின்படி ஏராளமான திட்டங்களை அறிவித்து, அதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை மூலம் முதல்வரின் உத்தரவுப்படி செயல்படுத்தப்படும். பணிகள் குறித்து தி.மு.கழக முதன்மைச் செயலாளர். சேலம் மண்டல பொருப்பாளர். நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தலைமைச்செயலகத்தில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் கே.என்.நேரு, முதல்வர்110. விதிகளின் படி அறிவித்து திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டவற்றை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் தொடங்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் துறைசார்ந்த அதிகாரிகளிடம், பணிகளை துரிதமாக விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக் கொண்டுவர அறிவுறுத்தி பணிகள், குறித்த ஆலோசனைகளையும் வழங்கி பேசினார்.
மக்களுக்காக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற 110. விதிகளின் கீழ் அறிவித்த திட்டங்களில் எவ்விதமான காலதாமதமோ, கவனக்குறைவேயின்றி. உரிய காலத்தில் முடிக்கப்பட வேண்டும். காலவிரையம் செய்துவிட்டு, கூறும்காரணங்கள் ஏற்க முடியாது. நமது துறைசார்ந்த பணிகள் மட்டுமல்ல, மக்கள் நலன் சார்ந்த அனைத்துத் துறைகளின் நலத்திட்டங்கள் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து உரியமுறையில் தமிழக முதல்வர் கண்காணித்து வருகிறார் எனவே அனைத்து அதிகாரிகளும், அலுவலர்களும், பணிகளும் அரசுக்கு முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.




Comments