அறிந்ததில் அறியாதது! ஆளுநரின் ஒப்புதல்யில்லை!ஜெ.வும் அமைச்சரவை மாற்றங்களும்! வலைதளை வைரல் பதிவு!!
- உறியடி செய்திகள்

- Jun 28, 2023
- 2 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
1994ல் ஆளுநர் சென்னாரெட்டி ஒப்புதல் இல்லாமல் அமைச்சரவையை அதிரடியாக மாற்றியவர் ஜெயலலிதா!
இத்தகைய வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது என்பது ஒரு பக்கம் கேள்வியாக எழுந்தாலும்!
ஆர்.என்.ரவியின் இன்றைய சனாதன செயல்பாடுகளுக்கு, வக்காலத்துவங்கி முட்டுக் கொடுப்போரும், இத்தகைய வரலாற்றை அறிந்து, கருத்துக்களை கூறவேண்டும் என்று சமூக வலைதளங்களில் இச்செய்தி ஒரு பக்கம் வைரலாகியும் வருகின்றது!
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் மற்றும் ஆளுநர் ஒப்புதல் குறித்து தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல 29 ஆண்டுகளுக்கு முன்னரும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான சர்ச்சை தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது.
1991-1996-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் அதிக முறை அமைச்சரவையை மாற்றி அமைத்த சரித்திரம் படைத்தவர் ஜெயலலிதா அம்மையார். !

இத்தனையாவது முறையாக தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் என தலைப்புச் செய்தியாக எழுவதுதான் அவரது காலத்தில் தமிழ்நாட்டு பத்திரிகைகள் கடைபிடித்த மரபுகளில் ஒன்று.
ஜெயலலிதா காலத்தில் அமைச்சரவை மாற்றம் அப்படித்தான் திடீர் திடீரென நிகழும். சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதாலேயே அடுத்த நாள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு புதியதாக ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட வரலாற்றையும் படைத்தவர் ஜெயலலிதா. அப்படியான ஆளுமை கொண்ட ஜெயலலிதாவுடன் ஆளுநர் நான் என்ற கோதாவில் மல்லுக்கட்டினார் சென்னாரெட்டி. அப்போது பாஜக இந்திய அரசியல் சீனில் உதயமாகிக் கொண்டிருந்தது. சென்னாரெட்டி ஆந்திராவின் முன்னாள் முதல்வர். முதுபெரும் காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்.!
1994-ம் ஆண்டு அக்டோபர் 8-ல் சில அமைச்சர்களது இலாகாக்களை முதல்வராக இருந்த ஜெயலலிதா மாற்றி அப்போது ஆளுநராக இருந்த சென்னாரெட்டிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் 1994-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி வரை அதாவது சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக ஆளுநர் சென்னாரெட்டியிடம் இருந்து இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் வரவில்லை.
இதனையடுத்து அதிரடிக்குப் பெயர் பெற்ற ஜெயலலிதா, 1994-ம் ஆண்டு நவம்பர் 16-ந் தேதி தன்னிச்சையாகவே அமைச்சரவை இலாகா மாற்றங்களை அறிவித்தார். அரசியல் சாசனப்படியான முதல்வருக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார். இதன் பின்னர் இந்த அமைச்சரவை மாற்றத்தை ஏற்று 1994 நவம்பர் 21-ந் தேதி ஆளுநர் சென்னாரெட்டி, ஒப்புதல் தந்து கையெழுத்திட்டார். அப்போது செங்கோட்டையன், ஜெயக்குமார், மதுசூதனன், இந்திரகுமாரி, லாரன்ஸ் ஆகியோரது துறைகளைத்தான் ஜெயலலிதா மாற்றி அமைத்தார்.!
அத்துடன் சர்ச்சை ஓயவில்லை. 1994-ல் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் முதல்வர் ஜெயலலிதா இலாகா மாற்றம் செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் ராமு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சிவராஜ் பாட்டீல் இவ்வழக்கை விசாரித்தார். 1994-ல் அமைச்சரவை மாற்றம் தொடர்பான இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, பொதுமக்கள் நலன் கருதி அமைச்சரவை இலாகா மாற்றம் செய்வது சட்டவிரோதம் இல்லை; முறைகேடும் இல்லை என ஜெயலலிதா தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
இப்படியான ஆளுநர் சென்னாரெட்டி- முதல்வர் ஜெயலலிதா மோதலின் உச்சம்தான் அந்த கிளைமாக்ஸ்.. தமிழ்நாடு வரலாறு மறக்காதது. அதாவது தமிழ்நாடு ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா பகீர் புகார் கூறியதும் இந்த சர்ச்சைகளின் தொடர்ச்சிதான் என்பது அண்மைய அரசியல் வரலாறு.!





Comments