தீரர் கோட்டம் திருச்சியில்! தலைவரின் வழியில் எளிமைதொண்டராய் கே.என்.அருண் நேரு!! ஓர் சிறப்பு பார்வை
- உறியடி செய்திகள்

- Dec 12, 2022
- 3 min read

மணவை, எம்.எஸ்.ராஜா.....
தீரர் கோட்டம் திருச்சியில், கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வழியில் - தி.மு.கவினர் - மக்கள்மனதில் அருண் நேரு!
தமிழக அரசியல் கட்சிகளில், இளம் தலைமுறையினர் கோலாட்சும் சூழல் மிகவும் விரைந்துஉருவாகி, இளைஞர் தலைமுறையினரின் கைகளில், நிர்வாகம், கட்சிப் பணி, போன்றவை அதிவிரைந்து வருகிறது என்றால் மிகையில்லை.....
அவ்வாறாக அரசியல் கட்சிகளில் பணியாற்றி மக்கள் மனதிலும், தங்கள் கட்சியிலும் எல்லோரது நன்மதிப்பை பெற்று, எதிர்பார்ப்புகள் மிகுந்த ஆளுமைகளாக பேசப்படுவதும், நிலைத்து இயக்கப் பணிகளை முன்னெடுப்பதும் ஒரு சிலர்மட்டும்தான்......

அதிலும், வசதி வாய்ப்பு, தொழில், பின்புல சக்திகளை, தாங்கிகொண்டிள்ளாமல் ஒரு திராவிட கட்சியில், எதிர்ப்புகளுடன், தனது கட்சியின் வருகை குறித்து பேசப்படும், வளரும் இளம் ஆளுமைகள் மிகமிக அரிதென்றே கூறலாம்....

அந்தவகையில், அரசியல், தொழில், வசதி வாய்ப்பு, இவற்றை முன்னெடுக்காமல், பதவி பற்றிய சிந்தனை கொள்ளாமல் எளிமையாக, - கட்சியினர் - மக்கள் அனைவரும் எளிதில் அணுகும் மனிதராக அரசியல் இயக்கத்தில் வலம் வருபவர்கள் என்பது கேள்விக்குறியதாகவே தெரியும் இக்காலட்டத்தில், அப்படி ஒருவரை தங்கள் வருங்கால அரசியல் எதிர்காலமாக மிகுந்த நம்பிக்கையுடன் திருச்சி மண்டலத்தில் கொண்டாடி மகிழ்ந்து,வருவது பற்றிஅரசியல் பார்வையாளர்கள், விமர்சகர்களால் மிகுந்த எதிர்பார்ப்புமிக்க ஒன்றாக பேசப்படுகின்றது........

படித்த இளைஞராக அடுத்தத் தலைமுறை க்கு, தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின், திராவிட கருத்துக்களை, சிந்தனைகளை, பாரம்பரியதிராவிட கொள்கைகளை, அப்பழுக்கின்றி அணுவும் பிசகாமல் மிகுந்த நேர்த்தியுடன் எல்லோரும், புரிந்து ஏற்றுக் கொண்டு, திராவிட கொள்கை வழியில், அழைத்துச் செல்லும் அருண் நேரு என்று மகிழ்ச்சி கலந்த பூரிப்புடன் தங்களுள் ஒருவராக பாவிக்க தொடங்கி அவரை பின்தொடரும் நிலையும் நாளுக்கு, நாள் அதிகரித்தே வருவதாக கூறுகின்றனர் திருச்சி தி.மு.கழகத்தினரும், அரசியல் நோக்கர்களும்..... ....

தனது பாட்டன் பூட்டன் காலம்தொட்டே செல்வந்தர் குடும்ப பாரம்பரியமுடைய குடும்பத்தை சேர்ந்தவர்
தனது பரம்பரை செல்வந்ததன்மையோ.
படித்த, தொழிலதிபர் என்கிற தலைகனமோ ஆணவமோயில்லாமல், வாழும் திராவிட சிந்தாந்த தலைவரான தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தளபத மு.க.ஸ்டாலின், கழகம், திராவிட சிந்தனை கொண்ட எண்ணத்திற்கு ஏற்பவும். பேரறிஞர் அண்ணாவின் அறிவுரையாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கடிக் கூறிப்பிடக்கூடிய திராவிட கொள்கை சித்தாந்தமான, மக்களை நேசி, மக்களோடு செல், மக்களோடு வாழ்.மக்களுக்காக உழைத்திடு என்கிற பொன்மொழிக்கு ஏற்ப செயல்படக்கூடிய தி.மு.கழத்தினரிடையே,

இன்றைய இளம் தலைமுறையை வழிநடத்தும், கழக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாராட்டி போற்றும் வகையில் மூத்த முன்னோடிகளையும், அன்பு கலந்து அரவணைப்புடன் திராவிட பாதையில்அழைத்து செல்ல, அருண் நேரு தேவைப்படுகிறார். என்பது மூத்த முன்னோடிகள் தொடங்கி........ திராவிட இயக்கத்தில்,துளிர்விட தொடங்கியுள்ள இளம் தலைமுறையினர் வரை தேவைப்படுபவராகவும் திகழுகின்றார். அருண் நேரு............

அரசியலில் காலில் விழும் கலாச்சாரத்தையும், தனிமனித துதிபாடுதல்களையும்,
அறவே விரும்பாத, அத்தகைய பழக்கத்தை ஒழித்துகட்டக்கூடிய வராகவும் .......
. தான் ஒருமுறை ஒருவரை சந்தித்து பேசினால். காலங்கள் கடந்து மீண்டும் சந்திக்க நேரிடும் வேளையில், அவர் பெயர்சொல்லி அழைக்ககூடிய, பண்பும், நினைவாற்றலும், அரசியல் நாகரீகமும் கட்சியினரிடையே, மக்கள் தேவைகள், அடிப்படை வசதிகள், அத்தியாவசிய தேவைகளை அறிந்து தொகுதியின் எம்.எல்.ஏ.வான, தனது தந்தை அமைச்சர் கே.என்.நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்று. அவ்வப்போது நிறைவேற்றியும், செயல்படுத்தியும் மக்களிடத்திலும், கட்சியினர் மத்தியிலும் மிகப்பெரிய நம்பக த்தன்மையைப் பெற்றவராகவும் திகழ்கின்றார்.........

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, 39. வார்டுகளை சேர்ந்த பொதுமக்களின் அத்தியாவசிய, அடிப்படை தேவைகள், கோரிக்கைகளை. இப்பகுதியினர் தன்னை எளிதில் அணுகி கூறிட தன்னை சுற்றி மிக எளிமை படுத்திக்கொண்டு,மிகுந்த கவனமும் அக்கரையும் கொண்ட அருண் நேரு, அத்தகைய மக்களின் கட்சியினரின் கோரிக்கைகளை, ' உடனுக்குடன், தந்தை அமைச்சர்.கே.என்.நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை நிறைவேற்ற செய்வதில் தனி கவனம் செலுத்தும்அருண் நேரு......,

ஒன்றுபட்ட திருச்சி மாவட்டப்பகுதியிலும் தனது கவனத்திற்கு வரும் மக்கள் பிரச்சனைகள், கட்சியினர். கோரிக்கைகள். கட்சிப் பணிகளை தீவிரபடுத்தி கட்சியின் வளர்ச்சிக்கும் தி.மு.கழகத்தினரை உற்சாக படுத்தி, கட்சி வளர்ச்சியிலும் தனி. முத்திரை பதித்து வரும் அருண் நேரு, மூத்த முன்னோடிகள், வளரும் கட்சியினர், எதிர்கால இளைய சமூகத்தினரின் மிகப்பெரிய நம்பிக்கையாகவும் திகழுகின்றார்........

மாநாட்டு நாயகர் என்கிற ஒரு சிறப்பு பெயர் அமைச்சர் கே.என். நேருவுக்கு உண்டு, அவர் எடுக்கும் ஒவ்வெருகழக வளர்ச்சி, முன்னோடி பணிகளுக்கு சத்தமில்லாமல், அமைச்சர், தி.மு.க.வின் மூத்த முன்னோடியின் மகன் என்பதை காட்டிக்கொள்ளாமல், தொண்டர்களோடு | தொண்டராய் தன்னையும் இணைத்துக்கொண்டு கழகப் பணிகளை தொடர்வது அருண் நேருவின் மற்றெரு தனிசிறப்பு என்பதும் குறிப்பிடதக்கது....
கட்சியில், எவ்வித பொருப்புமில்லாமல், திராவிட சித்தாந்தங்களை ஏற்றுகொண்டவராக........,

தனித்துவமானஆர்வமுடன், கட்சிப்பணிகளில் தனி கவனம் கொண்டு, அனைவரையும் அரவணைத்து மக்கள் பணிகள், கட்சிப் பணிகளை முன்னெடுத்துவரும் அருண் நேருவின் இத்தகைய நேர்த்தியான செயல்களும், அனைத்து தரப்பினரின் ஏகோபித்த ஆதரவுடன் செயல்படுவதாலும் தி.மு.கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர். தளபதி மு.க.ஸ்டாலின், வருங்கால கழக நம்பிக்கையாக கருதும், மாநில இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் குட் புக்கிலும் இடம்பிடித்துள்ள அருண் நேருவின், கட்சியின் பணிகள் - மக்கள் பிரச்சனைகளை மிக எளிதாக அனைவரோடும் மிக எளிமையாக ஒன்றி பணியாற்றுவது தி.மு.கழக மூத்த நிர்வாகிகளின், இளைய தலைமுறையினரின் கவனத்தையும் வெகுவாகவே ஈர்த்துள்ளது.......

அரசியல் பாரம்பரியம், முன்னோர்களின் அரசியல் பின்புலங்களை தூக்கி பிடித்து வந்து, கட்சியினர் மத்தியில் கவர்ச்சி அரசியல் நடத்தி, தான் ஆளுமையான பின்னர், அப்பட்டமான, சுயநல, சாதி, போன்றவற்றை மையமாக கொண்டு, மலிவுஅரசியலை முன்னெடுக்கும் இந்த காலகட்டத்தில்,......

தனது தந்தையான, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகத்துறையின் (மூத்த) அமைச்சர் கே.என்.நேருவின் மகனாகவோ, தனது தந்தையின் பின்புலத்தையோ, பின் பலத்தையோ, சற்றும் விரும்பாமல், முத்தமிழறிஞர் கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட, தி.மு.கழகத் தலைவர் முத்துவேல் கருணாந்தி ஸ்டாலின், மூத்த முன்னோடி பெரும் தலைவர்கள், இளைஞர் களுக்கும், ஏனைய அனைத்து தரப்பிருக்கும், திருச்சி மண்டல தி.மு.கழக எதிர்காலத்திற்கும் பெரும் நம்பிக்கையாக பணியாற்றி, கழகத்தினரின் அனைத்து மட்டத்திலும் அசைக்கமுடியாத நம்பிக்கையை பெற்று தி.மு.கழக இளைஞரணியினரை வரலாறு போற்றும் வகையில் வழிநடத்தும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின். கழகசிந்தனைகளை தொண்டர்களை அரவணைத்து செல்லும் பாங்கை, நூற்றாண்டை நெருங்கும் திராவிட கொள்கைகளால், ஈர்க்கப்பட்டு, கழக பணிகளை தொண்டர்களோடு, தொண்டனாய். சகோதரனாய், நாம் அனைவரும்,ஒரே குடும்பம் எனும் உயரிய மனப்பாங்கு. சிந்தனையை மனதில் கொண்டு தனது கட்சிப்பணி. மக்கள் நலப்பணிகளை. முன்னெடுத்தும் வருகிறார் அருண் நேரு. என்கின்றனர், மூத்த நிர்வாகிகளும், அரசியல் விமர்சகர்களும்......

தீரர் கோட்டமாம் திருச்சியில், மூத்த திராவிட இயக்கத் தலைவர்கள், ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி. பண்ணை முத்துகிருஷ்ணன், பொற்ச்செல்வி இளமுருகு, பரமத்தி சண்முகம், உள்ளிட்ட தி.மு.கழகத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கரையும், கொள்கைப்பிடிப்போடு. அவர்கள் ஆற்றிய கழகப் பணிகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். ஆனால் இத்தகைய வரலாறு போற்றும் கழகத்தின் தளகர்த்தர்கள் இன்று இல்லையே என்று ஏங்கி தவித்த ஒட்டுமொத்த திருச்சி மண்டல தி.மு.கழகத்திரின் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து, நம்பகத்தன்மையையும் பெற்றுகிட்டதட்ட வளரும் தளகர்த்தராகவே அருண் நேரு திகழ்வதாகவே, அரசியல் பார்வையாளர். மூத்த கட்சியினர், நடுநிலையாளர்களால் பார்க்கப்படுகின்றது.... ...

அருண் நேரு, மூத்த முன்னோடி கட்சியினரையும், நிர்வாகிகளையும், எதிர்கால இளைய சமூதாயத்தையும் மிகுந்த இணக்கத்துடன், ஆர்வத்துடன், எளிமையாக, தனி கவனம் கொண்டு அக்கரையுடன் முன்னெடுக்கும் பணிகள், திருச்சி மண்டலத்தில் எதிர்கால இளம் வழிகாட்டியாக திகழ்வார் என்பதே இப்பகுதியினர் மிகுந்த அசைக்க முடியாத மாபெரும் நம்பிக்கையாக உள்ளது......
திராவிட இயக்கத்தை, தி.மு.கழகத் தலைவர்,தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொடரவும், திராவிட இயக்க இளைஞய சமூதாயத்தின் நல் வழிகாட்டியாய் கழகத்தின், கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு மிகத்தீவிரமாக எடுத்துச் செல்லும் தி.மு.கழக இளைஞரணி செயலாளர்,உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைகளின்படியும். அவர் தம் கழகப் பணிகள் மென்மேலும் சிறப்புற இன்றைய திருச்சியின் இளம் தீரர், கே.என்.அருண் நேருவின் பிறந்தநாளில் நாமும் வாழ்த்தி மகிழ்ந்து, வரவேற்போம்...
சிறப்பு செய்திக்குழு.....
உறியடி இணையதள செய்திகள்




Comments