top of page
Search

தமிழாய்ந்த அறிஞர் பெருமக்கள்இல்லை! காசியில் நடந்தப்பட்டதுகாவிசங்கமா? தமிழ் சங்கம்மா?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 22, 2022
  • 2 min read
ree


காசி தமிழ்ச் சங்கமமா? காவி இந்துக்களின் சங்கமமா?

எழுந்த கடும் விமர்சனங்கள்!


தமிழோடு எந்த சங்காத்தமும் இல்லாத ஐ.ஐ.டி தான் தமிழ்ச் சங்கமம் ஏற்பாட்டாளராம்!


சமஸ்கிருத அறிஞரான சாமு சாஸ்திரி தான் ஒருங்கிணைப்பாளராம்!


தமிழ் அறிஞர்களை, படைப்பாளிகளை எல்லாம் தவிர்த்து விட்டு, பல கோடி செலவில், படாடோப ஏற்பாட்டில் நடக்கப் போவது என்ன?


முதலில் 2,500 பேர் என்றார்கள்! தற்போது 5,000 பேராம்! இலவச குளிர்சாதன ரயில் பயணம்! போக்குவரத்து, தங்குமிடம், சாப்பாடு, கண்டு களிக்க கலை நிகழ்ச்சிகள்! அயோத்தி ராமர் கோயில் பாரதமாதா கோவில் போன்ற கோவில்களில் தரிசனம் என ஏக தடபுடல்! அத்தனையும் இலவசமாம்! அரசாங்க செலவில் தங்கள் இந்துத்துவ பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்ச் சங்கமம் என்ற பெயர்!

ree

மத்திய அரசின் பாரதீய பாஷா சமீதி அமைப்பாளரான சமஸ்கிருத அறிஞரான சாமு கிருஷ்ண சாஸ்திரி தான் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறாராம்!

தமிழ்ச் சங்கமம் நிகழ்வை ஒருங்கிணைக்க நல்ல தமிழ் அறிஞரைக் கூட இவர்களால் அங்கீகரிக்க முடியவில்லையே!

தஞ்சையில் மத்திய அரசின் தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளதே அதை பயன்படுத்த இவர்களுக்கு மனமில்லையே!

காசி தமிழ்ச் சங்கமம் தொடர்பான அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள் இந்தியில்!

சென்னை ஐ.ஐ.டிக்கும், தமிழுக்கும் என்னய்யா சம்பந்தம்?

தமிழேப் புழங்காத ஒரு கல்வி நிறுவனம் தானா கிடைத்தது?

தங்கள் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தை சேர்ப்பதற்கே அவர்கள் எவ்வளவு தயக்கம் காட்டினார்கள் என்பதை மறக்க முடியுமா?

90 சதவிகிதம் ஆரிய பேராசிரியர்களைக் கொண்ட ஒரு தொழில் நுட்ப கல்வி நிறுவனம் தமிழ் நிகழ்வை எங்கனம் நடத்த முடியும்?

ree

இவங்களுக்கு ஒத்தாசை பண்ணுவது காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாம்!

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான உறவு என்பது ஆன்மீகம் சம்பந்தமானது தானே அன்றி, தமிழ் சம்பந்தமானதல்ல!

அப்படியே தமிழுக்கு சம்பந்தம் இருப்பதாகக் கொண்டாலும், அந்தத் தமிழ் சம்பந்தமும் ஆன்மீகம் தொடர்பானதே அன்றி வேறொன்றுமல்ல!

ஏனென்றால், எல்லாமே ஓசி என்பது ஒரு புறம்! போவது பக்தி மற்றும் அரசியல் சுற்றுலா என்பது மறுபுறமுமாக இருக்கும் போது, அறிமுகமில்லாத தமிழ் அறிஞர்களோ, கலைஞர்களோ, எழுத்தாளர்களோ தேவையில்லை என தீர்மானித்து அவர்களே எல்லா பதிவையும் செய்து முடித்துவிட்டு ஒப்புக்கு இப்படி ஒரு தகவலையும் வெளியிட்டு தங்களை பாதுகாத்துக் கொண்டாங்க!

பா.ஜ.க அலுவலகத்தில் காசி தமிழ்ச் சங்கமம் தொடர்பான சிறப்பு மலர் வெளியீடு!

216 பேரை உள்ளட்டக்கிய பனிரெண்டு குழுக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்!

இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள், யோகா வல்லுனர்கள், ஆயுர்வேதா மருத்துவர்கள் (தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் கிடையாது) இசைக் கலைஞர்கள், பாடகர்கள், நடனமணிகள், வணிகர்கள், வலைப்பதிவர்கள் என ஏகப்பட்ட வகைப்பாடுகளில் ஆட்களை உள்ளுக்குள் இழுத்து இருக்காங்க!

ஆனா, உண்மையில் இதெல்லாம் வெளித் தோற்றத்திற்காக சொல்லப்பட்ட தகுதிகள்!

ஆனால், இந்த காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்வதற்கான முழு முதற் தகுதி ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகள், இரண்டாவது தகுதி பா.ஜ.க உறுப்பினர் என்பது சொல்லப்படாத அம்சமாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது!

இதை பாஜகவினர் வெளியிட்ட விளம்பரங்களாலும், ஐ.ஐ.டியின் பின்புலத்தாலும் நாம் அறியலாம்!

ஆக, இது தமிழக பா.ஜ.க மாநாடு என்றும் சொல்லலாம்!

பிரதமர் மோடியே இதில் கலந்து கொண்டு பேசுகிறாராம்!

காசியில் அனுமந்த் காட் எனப்படும் ஒரு பகுதியில் முழுக்க, முழுக்க யார் அதிகமாக உள்ளனர் என்பதே உணர்த்துமாம்!

அவர்கள் தங்களின்

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற பா.ஜ.கவிற்குள் கடுமையான போட்டாப் போட்டி நிலவியதில் அதிலும் கொஞ்சம் பாலிடிக்ஸ்!

அண்ணாமலை கோஷ்டிக்கு, ஹெச்.ராஜா கோஷ்டிக்கு, வானதி சீனிவாசன் கோஷ்டிக்கு என ஆளாளுக்கு தங்கள் கோஷ்டி ஆட்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளார்கள் என தெரிய வருகிறது.

இதில் செலக்‌ஷன் கமிட்டி என்பது ஆர்.எஸ்.எஸ் தானாம்!

கோடிக் கோடியாய் செலவுக்கு பஞ்சமில்லை!

எல்லா செலவையும் மத்திய அரசு தான் செய்கிறது!

பா.ஜ.க அரசின் ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது என பாரதிய பாஷா சமீதி சொல்கிறது!

ஒரே நாடு, ஒரே கல்வி என்பவர்களுக்கு ஒரே மொழி என்று சொல்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவைப்படலாம்!

பலி கொடுக்கும் ஆட்டைக் குளிப்பாட்டி அலங்கரித்து மாலையிட்டு வணங்கி தான் பலி கொடுப்பார்கள்!

அந்த வகையில் இந்த பா.ஜ.க அரசும், ”தமிழ், தமிழ்..” என்று ஓவராக சீன் காட்டி அரவணைத்து தான் நம்மை அழிப்பார்கள்!

தமிழ் நாட்டு அரசையும், உண்மையான தமிழ் அறிஞர்களையும் முற்ற முழுக்க ஒதுக்கி வைத்து விட்டு தமிழுக்கு விழாவா?

அறிவியல் தமிழை, உண்மையான தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வுகளை புறக்கணித்து ஆன்மீகம் மட்டுமே தமிழ் என்பதாக மாய்மாலமா?

மக்கள் வரிப்பணத்தில் மத சித்தாந்தத்தை பரப்ப, மொழியின் பெயரால் நடத்தப்படும் அரசியல் சித்து விளையாட்டே இந்த காசி தமிழ் சங்கமம்!

இவ்வாறு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன...........


இதனால தான் மீண்டும் தந்தைபெரியார், வேண்டு முன்னு கேட்கறாங்களோ!!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page