இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்கிறார் திருமுருகன் காந்தி! வை.கோ.எம்.பி.பேச்சு!!
- உறியடி செய்திகள்

- Nov 18, 2022
- 1 min read

இளைஞர்களுக்கு நல்ல அரசியல் வழிகாட்டியாகே .மே. 17. இயக்க ஒருங்கிணைப்பாளர திருமுருகன் காந்தி செயல்பட்டு வருகின்றார். மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ.பேச்சு.
சென்னை தேனாம்பேட்டையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் திசை புத்தக நிலையத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்.பி.பேசியதாவது....

ஈழப் போரில் லட்சகணக்கான தமிழர்கள் உயிர் இழந்துள்ள நிலையில் அவர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை பல் வேறு இடையூறுகள், தடைகளுக்கு ஈடையே நடத்தி காட்டியன், மே.17. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. என்றால் அது மிகையில்லை....
இன்றைய அரசியல் சூழலில்இளைஞர்களுக்கு நாட்டின் மீதும், சமூகத்தின் மீதும், சரியான புரிதலை ஏற்படுத்தி நல்வழிகாட்டக்கூடிய தகுதி திருமுருகன் காந்தியிடம் உள்ளது.
அரசியலில் ஈடுபடும் தமிழக இளைஞர்கள் இங்கு உள்ள திராவிட கட்சிகளில் இணையவிருப்பமில்லை எனில் அவர்கள் திருமுருகன் காந்தியை பின்பற்றே வேண்டும்லாம் .
அடுத்த 15 ஆண்டில் திருமுருகன் காந்தி இளைஞர்களுக்கு அரசியல் நல்வழிகாட்டக்கூடிய தலைவராக வருவார் . என்னைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் திருமுருகன் காந்தி பின்னாடி செல்லுங்கள் என்பேன்
தென் மாநிலங்களை பொறுத்தவரையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள நிலையில் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும் தீங்கை விளைவிப்பதாக உள்ளது.
வடக்கில் இருந்து வீசக்கூடிய வாடைக்காற்றும் நமக்கு ஒத்து வராது வடக்கே உள்ள கலாச்சாரமும் நமக்கு ஒத்தும் வராது . வடக்கு என்பது நமக்கும், நமது தொன்மைமிகு கலாச்சாரத்திற்கும், தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் எப்போதும் எதிரான வகையில்தான் செயல்பட்டு வருகின்றது.
அந்தவகையில்தான் நமது பண்டைகால வரலாற்றை திரித்து, அதில் சனாதானத்தை ஊட்டும்நூல்களாக்கி வருவதுடன், அதன் மூலம் ஊடுறுவவும் முயல்கிறார்கள், தொடர்ந்து சங்பரிவார அமைப்பினர்கள் - ஆதரவு சத்திகள் முயற்சி மேற்கொண்டும் வருகின்றனர் இதனை தடுக்க நமக்கு கூர்மையான கருவி தேவை அந்த கருவி தான் நம்முடைய முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவர்களின் புத்தகங்கள்...... . தமிழ்நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் முற்போக்கு தலைவர்கள் கூறிய கருத்துக்களையெல்லாம் தொடர்ந்து புத்தகங்களாக எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.... இத்தகையதமிழ்நாட்டின் விடையங்களுக்கு திசை பதிப்பகம் ஓர் திசையாக தொடர்ந்து செயல்பட வேண்டும்
இவ்வாறாக அவர் பேசினார்..




Comments