தூத்துக்குடி புத்தக விழா:சிறப்பு பேரூந்தில் கனிமொழி கருணாநிதி அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுடன் பயணம்
- உறியடி செய்திகள்

- Apr 23, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை, எம்.எஸ்.ராஜா...
புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் திருவிழாவிற்கான சிறப்பு பேருந்தில் பயணித்த கனிமொழி கருணாநிதி-அமைச்சர் கீதாஜீவன்!
தொடர்ந்து கற்கவும், வளரவும், மிகச்சிறந்த மற்றும் எளிமையான கருவிகளில் ஒன்று அதிகமான புத்தகங்கள் வாசிப்பதும் படிப்பதுமேயாகும் என்றும் கனிமொழி கருணாநிதி அழைப்பு!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி சாலை பிரிவு திடலில் புத்தகக் காட்சி மற்றும் நெய்தல் திருவிழா(28,29,30 &மே 1) நடைபெற்று வருகிறது. இந்த திடலுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நெய்தல் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திடல் வரை பொது மக்களுடன் பயணித்து வந்தார்.
இந்த பயணத்தின் போது பொது மக்களுடன் எளிமையாக உரையாடி நிகழ்ச்சி குறித்து விளக்கி அனைவரும் வரவேண்டும் என்றும். தங்களின் குழந்தை கள், மாணவர்கள், இதன்மூலம் பயன்பெ றவேண்டும். தொடர்ந்து கற்கவும், வளரவும், மிகச்சிறந்த மற்றும் எளிமையான கருவிகளில் ஒன்று அதிகமான புத்தகங்கள் வாசிப்பதும் படிப்பதுமேயாகும் என்றும் கனிமொழி கருணாநிதி அழைப்புவிடுத்தார்.




Comments