தூத்துக்குடி, தி.மு.கழக இளைஞரணி, தீவிர உறுப்பினர் சேர்ப்பு! உதயநிதிஸ்டாலின் தொடங்கிவைத்தார்....
- உறியடி செய்திகள்

- Nov 20, 2022
- 1 min read

மணவை, எம்.எஸ்.ராஜா....
தூத்துக்குடியில், தி.மு.கழக இளைஞரணி தீவிர உறுப்பினர் சேர்ப்பு, உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். கட்சியினர் உற்ச்சாக வரவேற்பு....
இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தந்தார் .
தூத்துக்குடி விமான நிலையத்தில்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர் . இளைஞர் அணி அமைப்பாளர், மகளிர் அணி செயலாளர், மற்றும் பல்வேறு அணிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து,வீடு வீடாக சென்று தெற்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டையில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையை மாநில தி.மு.கழக இளைஞர் அணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார்.....

இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில தி.மு.கழக இளைஞர் அணி துணைச்செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜோயல், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த், உள்ளிட்ட பலர் நிர்வாகிள் வரவேற்றனர். மாலை ஆறு மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் உட்பட்ட தூத்துக்குடி மாநகர பகுதியான அண்ணா நகர் பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.




Comments