தூத்துக்குடி: தூர்வாரும் பணி - நலத்திட்ட உதவி வழங்கும் விழா! கனிமொழி கருணாநிதி பங்கேற்பு!!
- உறியடி செய்திகள்

- May 7, 2023
- 1 min read

தூத்துக்குடியில், குளம் தூர்வாரும் பணி - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாாவில் கவிஞர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு பணிகளை துவக்கிவைத்து-நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோரம்பள்ளம் ஊராட்சி உள்ள குளத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான தூர்வாரும் திட்டப்பணிகளை இன்று மே.07. ஞாயிற்றுக்கிழமை திமுக துணைப் பொதுச் செயலாளர்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது இத்திட்டத்தினால் உப்பார் ஓடையின் உபரிநீரை சேமித்து, குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்கு பயன்படும் வகையில் கோரம்பள்ளம் குளத்தை சீரமைப்பதோடு, தூர்வாரப்படும் மண் சூழலியல் பூங்காவிற்கு பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
என்று கூறினார்.
தொடர்ந்து,மாவட்டத்திற்குட்பட்ட, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புன்னக்காயல் மீனவ கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டு மனைப் பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியின் போது பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, , தமிழ்நாடு வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி புன்னக்காயல் கிராமத்தில் நடைபெற்றது.


இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர்., திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு 840 குடியிருப்பு பட்டாவும் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா என மொத்தம் 900 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளரும், தமிழகமீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.




Comments