தூத்துக்குடி; முத்துநகரில் கடல்சார் விளையாட்டு போட்டி! கனிமொழி கருணாநிதி தொடங்கிவைத்தார்!
- உறியடி செய்திகள்

- Sep 9, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா
தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் வைத்து கடல் சாகச விளையாட்டுப் போட்டி! கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். !
தூத்துக்குடி முத்துநகர், கடற்கரையில் கடல் சாகசவிளையாட்டு போட்டிகள் தொடங்கி
நாட்கள் நடைபெறுகிறது.போட்டிகளில் 16 -மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 130-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். வெற்றி பெறும் வீரர்கள் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச கடல் சாகச போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.!

இந்த கடல் சாகச விளையாட்டு போட்டிகள் கடலில் ஏழு கிலோமீட்டர் தூரம் வரை சென்று வரும் வகையில் நடைபெறுகிறது. நின்று கொண்டே துடுப்பூ செய்யக்கூடிய போட்டி மற்றும் அமர்ந்திருந்து துடுப்பு செய்யக்கூடிய போட்டி என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படுகின்றது. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்தோனேசிய தலைநகர் பட்டாயாவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கும் பின்னர் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிக்கும் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.!

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேஷ், அரியானா, டில்லி ராஜஸ்தான் ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், சட்டிஸ்கர், உள்ளிட்ட 13 -மாநிலங்கள் மற்றும் இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய எல்லை பாதுகாப்பு படை ஆகிய இடங்களில் இருந்து போட்டிகளில் வீரர்கள்
பங்கேற்கின்றனர். வெற்றிபெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக தங்க பதக்கம் மற்றும் 10-ஆயிரம் ரூபாய் பரிசும், இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கம் 7-ஆயிரம் ரூபாய் பரிசும் மூன்றாவது பரிசாக வெங்கள பதக்கம் 5-ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.!

இந்த கடல் சாகச விளையாட்டுப் போட்டி துவக்க விழா நேற்று தொடங்கியது, தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர். நாடாளுமன்ற தி.மு கழக துணைப்பொதுச்செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கிவைத்தார்!
முன்னதாக வீரர்களிடம் பேசிய கனிமொழி கருணாநிதி வீரர்களை உற்சாகமுடன் வாழ்த்துக்கள் கூறினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர, தமிழக சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கொண்டனர்.




Comments