தூத்துக்குடி:நெய்தல் கலை-புத்தகத் திருவிழா! துவக்கிவைத்தார்கனிமொழி கருணாநிதி!!
- உறியடி செய்திகள்

- Apr 21, 2023
- 1 min read


ஆசிரியர் மணவை, எம்.எஸ்.ராஜா
தொடங்கியது தூத்துக்குடி நெய்தல் கலைவிழா. புத்தக திருவிழா, அகழாய்வு பொருட்கள்கண்காட்சி!
தூத்துக்குடியில் 4ஆம் புத்தகத் திருவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளர், தி.மு.கழக பாராளுமன்றக்குழுத்துணை த்தலைவர் தூத்துக்குடி நாடாளு உறுப்பினர்கனிமொழி கருணாநிதி எம்.பி துவக்கி வைத்தார்......

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4வது புத்தகத்திருவிழா இன்று தொடங்கியது. திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்றுள்ள புத்தக அரங்கினை பார்வையிட்டு, சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளின் போது கிடைக்கப்பெற்ற பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்கினையும் பொதுமக்களின் பார்வைக்கு தொடங்கி வைத்தார்!

புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் வாசிப்புப் பழக்கம் பற்றி பல்வேறு தலைப்புகளில் மக்களிடையே தங்களது கருத்துக்களை பரிமாறிக்
கொண்டார்கள். புத்தக திருவிழாவில் ஏறத்தாழ 110 புத்தக பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை கொண்டு வந்து கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது . மேலும், வருகிற 28ம் தேதி மண் சார்ந்த கலைஞர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொள்ளும் நெய்தல் கலை நிகழ்ச்சிகள் தொடங்க இருக்கிறது.



விழாவில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், சார் ஆட்சியர் கௌரவ் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், தூத்துக்குடி டிஎஸ்பி சங்கர், தாசில்தார் செல்வகுமார், உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.




Comments