தூத்துக்குடி: மகளீர் உரிமை தொகை விழா! ஏ.டி.எம்.அட்டைகளை வழங்கி கனிமொழி கருணாநிதி தொடங்கிவைத்தார்!
- உறியடி செய்திகள்

- Sep 15, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா....
தூத்துக்குடி: மகளீர் உரிமை தொகை விழா! ஏ.டி.எம்.அட்டைகளை வழங்கி கனிமொழி கருணாநிதி எம்.பி.தொடங்கிவைத்தார்! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.!
பேரறிஞர் அண்ணாவின்
பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் மு க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இன்று
செயல்படுத்தியுள்ள நாடு போற்றும் திட்டமான
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைதிட்டத்தின், தொடர்ச்சியாக தூத்துக்குடியிலும் இன்று காலை, சுமார் 11.மணிக்கு இத்திட்டத்தின் தொடக்கவிழா
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது.!

விழாவில், தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர். நாடாளுமன்ற உறுப்பினர்கள்க்குழுத் துணைத் தலைவர்
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர்.கனிமொழி கருணாநிதி
திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வங்கி பற்று புத்தகம்- ATM அட்டைகளையும் வழங்கி, விழா பேரூரையாற்றினார்.!

தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்,தமிழகமீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா,
மாவட்ட ஆட்சியர் மரு. கி.செந்தில்ராஜ் தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் .பிரம்மசக்தி
வருவாய் கோட்டாட்சியர் .குருச்சந்திரன்
மற்றும் தி.மு.கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் உள்ளிட்ட பொதுமக்கள், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.!




Comments