வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்தவர்கள்தான்! மக்கள் தலைவர்களானார்கள்!! கனிமொழி கருணாநிதி, எம்.பி. பேச்சு!!
- உறியடி செய்திகள்

- Nov 23, 2022
- 2 min read

மணவை, எம்.எஸ்.ராஜா...
தூத்துக்குடி தனியார் மண்டபத்தில், 30ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவை நேற்றுதுவக்கி வைத்து பேசிய கனிமொழி எம்பி " வாசிப்பு .பழக்கத்துடன், புத்தகங்களை தேடித்தேடி சிந்தனையை செதுக்கி கொண்டவர்கள்,தான் சமூகத்தில் உண்மையான மக்கள்தலைவர்களாக வந்திருக்கிறார்கள்" என்று கனிமொழி கருணாநிதி கூறினார்.......
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகத் திருவிழாவினை தி.மு.கழக துணை பொதுச் செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழகக்குழுவின் துணைத் தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தொடங்கி வைத்து பேசியதாவது ......

தூத்துக்குடி புத்தகத் திருவிழா தொடங்கி வருகிற நவ, 30. ந் தேதி வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும் என்று உங்கள்மீதுள்ள நம்பிக்கையோடு நடத்தப்படுகிறது.....
உலகில் உள்ள விஷயங்களையும் உங்களுக்கு கொண்டு வந்து தரக்கூடியது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்தான்.
பேரறிஞர் அண்ணா, ஒரு வீட்டில் நூலகம் இல்லையென்றால் அதை வீடாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வதில் இருந்தே புத்தகத்தின் முக்கியத்துவம் நமக்கு தெரிய வேண்டும். தான் படித்த புத்தகத்தை படித்து முடித்தபின்பு அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவரிடம் தெரிவிக்கும் அளவுக்கு அவர் வாசிப்பு பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்........

எனக்கு நண்பர்களாக என் வாழ்க்கை முழுவதும் புத்தகங்கள் இருந்து வருகின்றன. புத்தகங்கள் இருக்கும்பொழுது ஒவ்வொரு நாளும் என்னால் ஒரு புது உலகத்தில் வாழ முடியும்.
கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் புத்தகங்களை, எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை பார்த்து பயந்தார்கள். இதனால் புத்தகங்கள் தடை செய்யப்பட்டது.......
எழுத்தாளர்கள் எழுதுவதற்கும் தடை செய்யப்பட்டார்கள். சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். புத்தகத்தை, எழுத்தாளனை, சிந்தனையாளனை இல்லாமல் செய்துவிட்டால் இந்த மக்களை நாம் அடிமையாகவே வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் நினைத்தார்கள்.......

அந்த அடிப்படையில்தான், இன்றும் எழுத்தாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். இதனால் நாம் புத்தகங்களின் வீரியத்தினை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளரின் சாதாரண வார்த்தை இந்த சமூகத்தை மாற்றக்கூடிய ஒன்றாக மாற முடியும் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்........
முத்தமிழறிஞர் கலைஞர் பராசக்தி திரைப்படத்தில் சமூகத்தில் எதைப்பற்றி கேள்வி கேட்கக்கூடாது என்று வைத்திருந்தார்களோ அவற்றையெல்லாம் மக்களின் அறியாமை இருளை போக்கி, படுத்தறிவு சிந்தனைகளை வளர்க்கும் விதமாகவும், தமிழ் சமூகம் மாற்றம் பெற்று, ஏற்றமடையும் வகையில் எழுதியுள்ளார்கள்......
எதைப்பற்றி பேசக்கூடாது என்று இருந்ததோ அதையெல்லாம் கேட்கக்கூடிய தைரியம் அந்த எழுத்தில் இருந்தது. அவரின் வழியில், கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், தளபதி, மு.க.ஸ்டாலின் எழுத்தாளர்களையும், வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இதற்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமல்ல, நூலகமே இல்லாத பகுதியே தமிழகத்தில் இருக்ககூடாது, என்கிற எண்ணத்துடன் புதிய நூலகங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை கொடுத்து உத்தரவிட்டுள்ளார்........

வாசிப்பு பழக்கத்தை அதிகபடுத்தி கொண்டு, தனது சிந்தனையை செதுக்கிக்கொண்டவர்கள்தான் இந்த சமூகத்தில் உண்மையான மக்கள் தலைவர்களாக வந்திருக்கிறார்கள். எது நமது அடையாளம், எது நமது வரலாறு, எதை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு சொல்லித்தரக்கூடியது புத்தகங்கள்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் என்ற கரிசல் இலக்கியம்தான் இன்றைக்கு நாம் கொண்டாடக்கூடிய நாட்டார் கதைகளாக மாறியிருக்கின்றன. கிராமிய கலைகளை கொண்டாடக்கூடிய நிலையை அந்த எழுத்துக்கள் உருவாக்கியிருக்கின்றன. நீங்கள் அனைவரும் புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெறுவதுடன் நமது எதிர்கால சந்ததினருக்கும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கவிக்க வேண்டும்
இவ்வாறு
.கனிமொழி கருணாநிதி பேசினார்.......

விழாவில் கலெக்டர், கி.செந்தில்ராஜ்,மாவட்ட எஸ்.பி.காவல் லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.....




Comments