தூத்துக்குடி:மாற்றுகட்சியினர் அமைச்சர்கீதாஜீவன் முன்னிலையில்தி.மு.க.வில் இணைந்தனர்!
- உறியடி செய்திகள்

- Apr 9, 2023
- 1 min read


ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா.
தூத்துக்குடியில் பா.ஜ.க. அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அமைச்சர் சீதாஜீவன் முன்னிலையில் தி.மு.கழகத்தில் இளைந்தனர்.
தமிழ்நாட்டிலுள்ள, தி.மு.கழக நிர்வாகிகளுள், துடிப்பு,சுறுப்புடன் மாற்றுக் கட்சியினரும் பாராட்டும் வகையில் கழக வளர்ச்சிக்காணப் பணிகள் - அரசு நலத்திட்டங்களை மிகுந்த கவனமுடன். மக்களை முழுமைதியாக சென்றடைய செய்து.தி.மு.கழகத் தலைவர்.தமிழ்நாடு முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகுந்த நம்பிக்கைக்குரியவராக செயலாற்றி வருவதில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும்....

அமைச்சர் கீதா ஜீவன் தனது தொகுதியில் இருக்கும் போதெல்லாம் தொகுதி மக்களின், சிறுபான்மையினர், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி நேரில் தேடிச்சென்று அப்பகுதியில் முகாமிட்டு பிரச்சனைகளுக்குரிய தேவைகளையும், அரசு உதவிகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து முதல்வர் தளபதியாரின் நே ரடி கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றி தந்து செயல்பட்டு வருவதை யும்,அனைத்துத்தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றார்....

சமீபகாலமாக பா.ஜ. அ.தி.மு.க.வின் நிர்வாகிகளின் செயல்பாடுகளில் அதிர்ப்த்தி கொண்டு, தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் மக்கள்நலப்பணிகளையும் மக்களின் உணர்வுகளை அறிந்து செயல்படுவதையும், உணர்ந்து,கழகத்தின் மீதும், கழகத் தலைவர் தளபதயார் மீதும் மாறா பற்றுடன்நம்பிக்கை கொண்டு.

தூத்துக்குடிபாஜக மாவட்ட அமைப்புசாரா தொழில் பிரிவு துணைத்தலைவர் மாரியப்பன் மற்றும் கயத்தாறு முஸ்லிம் ஜமாஅத் தலைவர், நெல்லை அதிமுக மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அவைத்தலைவர். KMS. பீர் முகைதீன் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தங்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் கீதாஜீவன், திராவிட இனத்திற்கும், தமிழ் மக்களின் உரிமைகள் வாழ்வாதரங்கள், பெண்கள் முன்னேற்றம், வேளாண்மை வளர்ச்சி உழவர் நலன், அடிப்படை கட்டமைப்பு போன்றவைற்றை தமிழ்நாட்டு மக்களுக்கு பெற்றுத்தர அயராது உழைத்து வரும் மக்களின் முதல் அமைச்சர் , கழகத் தலைவர் தளபதியாரின் தலைமையில் சீறிய பணியாற்ற தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்ட உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க அயராது உழைத்து வரும் கழகத் தலைவர் தளபதியாரின் கரத்தை நாம் இணைந்து வலுப்படுத்துவோம்...
இவ்வாறாக அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.....
இந்நிகழ்வில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் திரு. பெருமாள், மாநகரச் செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மேயர் திரு. என்.பி. ஜெகன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. சின்னப்பாண்டியன் உள்ளிட்டோர். கலந்து கொண்டார்கள்...




Comments