திருநெல்வேலி: ஒண்டிவீரன் சிலைக்கு கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து புகழாராம்!
- உறியடி செய்திகள்

- Aug 22, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா....
இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 252-வது நினைவுதினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம், ரஹ்மத்நகரில் உள்ள ஒண்டிவீரன் ஒரு மணிமண்டபத்தில் அவரின் நினைவை போற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.!
விழாவில், தி.மு.கழகத் துணைப்பொதுச்செயலாளர்,தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தி.மு.கழக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு அவரின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில்ஒண்டிவீரன் பங்களிப்பு தியாகங்கள் குறித்தும் கவிஞர் கனிமொழி கருணாநிதி குறிப்பிட்டு பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் .மு.அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன், மாவட்ட செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன், .டி.பி.எம்.மைதீன்கான், மக்களவை உறுப்பினர் .ஞானதிரவியம், மாநிலங்களவை உறுப்பினர் .அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் .அப்துல் வஹாப், மாவட்ட ஆட்சியர் .கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் .சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்!




Comments