top of page
Search

மகளீர் சுயஉதவிக்குழுவினரின் உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டது தமிழக அரசு அமைச்சர் உதயநிதி பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 31, 2023
  • 4 min read
ree
ree


இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி கடன் இலக்கு!

சுயஉதவிக்குழுக்களுக்கு15 நாட்களில் வங்கிக் ! தமிழ்நாட்டில் மகளீர் சுயஉதவிக்குழுக்கள்பெண்களின் உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டது தான். கழக தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்று

சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


தமிழ்நாட்டில் 439349 சுயஉதவிக் குழுக்கள் பயனடையும் வகையில் இலக்கைத் தாண்டி

ரூபாய் 25 ஆயிரத்தி 22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும்

இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கடனுதவி 15 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி நேரத்தின் போது விளக்கமாக பதிலளித்துள்ளார்.

தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழகஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த சட்டமன்றத்தில் வினாக்களுக்கு பதிலளித்து பேசியதாவது....

ree

பேரவைத் தலைவர் வாயிலாக இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் மகளிர் சுய உதவி குழுக்கள் நேரடி வங்கி கடன் பெற குறைந்த பட்சம் மாதம் ஒரு முறை ஆறு மாதங்கள் தவறாது குழுக் கூட்டங்களை நடத்தி சேமிப்பு செய்து உள்கடன் வழங்கி குறித்த காலத்தில் உள்கடனைத் திரும்ப செலுத்தி கணக்குப் புத்தகங்களை முறைப்படி பராமரித்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் அவ்வாறு செயல்பாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒவ்வோராண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சுய உதவிக் கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் உடனடியாக கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

ree

அப்படிப் பெறப்பட்ட சுய உதவிக் கடன் விண்ணப்பம் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் முன்னெப்போதுமில்லாத வகையில் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி

21 நாட்களில் சுய உதவிக்குழுக்களின் வங்கிகணக்கிற்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது 21 நாட்களுக்கு மேல் நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் குறித்த அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் மாவட்ட வங்கியாளர்களால் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ree

2022-2023 ஆம் நிதியாண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பாக எங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கு 25000 கோடி ரூபாய்

ஆனால் நாங்கள் இலக்கைவிட அதிகமாக 25022 கோடியே 19 இலட்சம் ரூபாய் சுயஉதவி குழுக்களுக்கு கடன் இணைப்பாக அளித்துள்ளோம்

இதன்மூலம் 4 இலட்சத்து 39 ஆயிரத்து 349 சுய உதவிக் குழுக்கள் பயனடைந்துள்ளன இந்த ஆண்டு 2023-2024 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு சென்ற ஆண்டு ரூ 25000 கோடி இந்த ஆண்டு நம்முடைய தமிழ்நாட்டின் முதல்வர் அதை உயர்த்தி எங்களுக்கு இலக்கு 30000 கோடி ரூபாயாக அறிவித்துள்ளார்.

கண்டிப்பாக இந்த ஆண்டும் அந்த இலக்கைவிட அதிகமாக வங்கி கடன் இணைப்பை நாங்கள் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

ree

பென்னாகரம் தொகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து கேட்டிருக்கிறார்கள் தருமபுரி மாவட்டத்தில் தான் முதன் முதலில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில

மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது எனவே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கக்கூடிய கடனை இந்த அரசு ஆகஸ்ட் தமிழக முதல்வர் அவர்கள் ஆகட்டும் நாங்கள் கடனாகப் பார்க்கவில்லை கடன் தொகையாகப் பார்க்கவில்லை மகளிர் சுயஉதவிக் குழுவில் பங்குபெற்றிருக்கக்கூடிய நம்முடைய சகோதரிகள் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய அவர்களுடைய உழைப்பின் மீது வைத்திருக்க கூடிய நம்பிக்கைத் தொகையாகத் தான் நாங்கள் இதைப் பார்த்திருக்கிறோம் எனவே கண்டிப்பாக இந்த அரசு விரைந்து இதை செய்து முடிக்கும்

ஜி கே மணி (பாம.க.) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஒரு நல்ல விளக்கத்தோடு கூடிய பதிலை வழங்கியிருக்கிறார்கள்

குறிப்பாக சமுதாயத்தில் சரிபாதிக்குமேல் இருக்கக்கூடியவர்கள் பெண்கள் பெண்கள் முன்னேற்றம் தான் குடும்பத்தின் முன்னேற்றம் என்ற அடிப்படையில் இதற்கு முன்னால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்களை ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர்

2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்தது

பெண்கள் மத்தியில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .


அதைப்போலவே நேற்றுக்கூட நான் பேசிய நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத்தொகையை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த நேரத்தில் முதலமைச்சர் ஒரு கோடி உரிமை தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பை செய்தது நேற்று இரவு முதல் இன்றும் கூட தமிழ்நாடு முழுவதும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுருக்கிறது .

ree

இதற்கு காரணம் என்னவென்றால் மகளிர் முன்னேற்றம் தான் குடும்பத்தினுடைய முன்னேற்றம் மகளிர்தான் குடும்பத்திற்கு வெளிச்சம் நாட்டிற்கு கண்கள் என்ற அடிப்படைக் காரணம் தான்,

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா, என்றும் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றெல்லாம் சொன்னார்கள் இதையெல்லாம் சொல்லி இதை உணர்த்த வேண்டும் என்பதற்காக ஏதோ பாடினார்களே தவிர இந்தப் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதைக் கருத்திலே கொண்டு தான் பின்தங்கிய மாவட்டமாக இருக்கிற தருமபுரி மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மகளிர் சுயஉதவி குழுவை முதன்முதலாக தொடங்கினார்கள்.

அப்படி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால் தொடங்கப்பட்ட சுயஉதவிக்குழுக்கள் என்பது தற்போது தமிழ்நாடு முழுவதும் 4 இலட்சம் 68 ஆயிரம் சுய உதவிக் குழுக்களையும் சுமார் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை உறுப்பினர்களாகவும் கொண்டு விரிந்து பரவியிருக்கிறது

இவை மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது மகாசக்திகளாகிய பெண்களெல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் ருடைய அறிவிப்பைப் பார்த்து பாராட்டுகிறார்கள்

இங்கே வினா எழுப்புவதற்காக மட்டுமல்ல நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்தச் சூழலில் தான் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 30000 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது .


அது கடந்த ஆண்டை விட 5000 கோடி ரூபாய் அதிகம் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன் அத்துடன் அமைச்சர் குறிப்பிட்ட நேரத்தில் 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என்ற நல்ல அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றியையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

ree

தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,உறுப்பினர் கேட்ட கேள்விக்கு தெளிவாக ஆழமான பதிலை நான் அளித்துவிட்டேன் அதைவிட ஆழமான நன்றியை உறுப்பினர் தெரிவித்திருக்கின்றார்கள் அதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உறுப்பினர் ஏதாவது கேள்வி கேட்டால் நான் பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கிறேன் என்பதை பேரவைத்தலைவர் மூலமாக உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜி கே மணி(பா.ம.க.) இப்படி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நாடெங்கும் பரவியிருக்கிற வேளையில் தருமபுரி மாவட்டம் எங்களுடைய பெண்ணாகரம் தொகுதி உள்ளிட்ட பல இடங்கள் பெண்கள் மாதத்திற்கு இரண்டு முறை நான்கு முறை என கூட்டங்களை நடத்துகிறார்கள் அக்கூட்டங்களை எங்கேயாவது தெருக்களிலும் சாலை ஓரங்களிலும் நடத்துகின்ற நிலையிருக்கின்ற காரணத்தால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கட்டடங்கள் கட்டித் தரப்படுமா என்பதை அமைச்சர் வாயிலாக அறிய விரும்புவதோடு இப்படி பொறுப்பேற்றுக்கிற நல்ல அமைச்சர் அவர் மேலும் உயர்வு பெற்று நல்ல பணிகளை மேம்படுத்த வேண்டும் அவருடைய பணி மேலும் சிறக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்.

ree

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டிலுள்ள 12116 கிராம ஊராட்சிகளில் 1260 சதுர அடி பரப்பளவில் 3 அறைகள் அதாவது ஒரு இ சேவை மையம் ஒரு ஒரு கழிவறை வசதி கொண்ட கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன

மேலும் கூடுதலாக 12161 கிராம ஊராட்சிகளில் 350 சதுர அடி பரப்பளவில் பிரத்யேகமாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக மட்டுமே அவர்கள் பயன்படுத்துவதற்காக கட்டடங்கள் கட்டப்பட்டு அவைகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன

இவ்விரு

வகைக்கட்டடங்களும் சுய உதவி குழுக்களுக்கு குழு கூட்டங்கள் நடத்துவதற்கு வழங்கப்பட்டுள்ளன தேவையான இடத்தில் பரமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

பெண்ணாகரம் தொகுதியுள்ள தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 237 கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடங்களும் 2

39 சுய உதவிக் குழு கட்டடங்களும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன் இருப்பினும் சட்டமன்ற உறுப்பினர் ருடைய கோரிக்கை குறித்து நான் கள ஆய்வு செய்து

தேவையிருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்

கொள்கின்றேன்

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page