top of page
Search

ஊடகங்கள் யாரிடம்! ஊடகங்களை கட்டுபடுத்தும்சனாதானம்-பாசிஸம்!! மே.17. இயக்கம் பரப்பரப்பு தகவல்கள்!!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 3, 2022
  • 1 min read

ree

பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள்! மே.17. இயக்கம் அதிரடி தகவல்!


- மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது.....

,

முக்கிய ஆங்கில செய்தி ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் 89% உயர்சாதி ஊடகவியலாளர்கள். இந்த ஊடகங்களில் சிறப்பு நேரங்களாக மாலை 6 லிருந்து 9 வரை விவாதம் நடத்துபவர்களில் நான்கு பேரில் மூவர் உயர்சாதியினரான பார்ப்பன, பனியா வகுப்பினர்........


இந்தி மற்றும் ஆங்கில ஊடக நிறுவனங்கள் பலவும் வணிக நலன் கொண்ட வலதுசாரி பெரு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மட்டுமே IBN, CNBC, News 18 போன்ற 15-க்கும் மேற்பட்ட செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது. மோடியின் நண்பரான இவரின் நிறுவனங்களில் எந்த வகையான செய்திகள் ஒளிபரப்பப்படும் என்பது கண்கூடு.........

ree

குஜராத் மாடல் என்று பொய் செய்திகளைப் பரப்பினார்கள். தேநீர் விற்றவர் மோடி என்கிற கரிசனத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கினார்கள். சுவிசு வங்கியில் இருந்த கருப்புப் பணம் மீட்டு ஒவ்வொருக்கும் 15 லட்சம் தருவதாகக் கூறியதை எந்தக் கேள்வியுமற்று அப்படியே பரப்பினார்கள். இந்துத்துவ சிந்தனைகளைப் பரப்ப காவி பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகளைகளையெல்லாம் இஸ்லாமியர்கள் செய்ததாக விசாரணைகள் முடியும் முன்பே பரப்பினார்கள்........

ree

செய்தி தொலைக்காட்சிகள் மட்டுமல்ல, பத்திரிக்கைத் துறைகளிலும் செய்திகளை உறுதிப்படுத்தும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் 121 பேருக்கு 101 பேர் உயர்சாதியினராகவே இருக்கின்றனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஆங்கில பத்திரிக்கைகளில் 5%-க்கும் குறைவாகவும், இந்தி பத்திரிக்கைகளில் 10%-க்கும் குறைவாகவும் தான் தலித்கள் உள்ளனர்.

இவ்வாறாகவும், மேலும் வாசிக்கே மே 17. இயக்க இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page