நாளை,சேலம் மாவட்ட தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம்! அமைச்சர் நேரு பங்கேற்பு! செல்வகணபதி அறிக்கை!!
- உறியடி செய்திகள்

- May 29, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா.....
சேலம் ஒன்றுபட்ட தி.மு.கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், நாளை மே.30. அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெறுகிறது!
இது குறித்து
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க
மாவட்ட கழக செயலாளர் முன்னால் எம்.பி.டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது!
தி.முகழக தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், நாளை மே.30 செவ்வாய்கிழமை காலை 10 மணி அளவில், சேலம் ஐந்து ரோட்டில் உள்ள ரத்தினவேல்-ஜெயக்குமார் திருமண மண்டபத்தில், கழக முதன்மைச் செயலாளரும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர். தமிழ்நாடுநகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
மேலும் சேலம் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள கழகத் தலைவர் முதல்வர் தளபதியாரின் வருகை பற்றியும் சிறப்பான உற்சாக வரவேற்பளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இந்நாள்-முன்னாள் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்,கிளை கழக,வார்டு கழக செயலாளர், இந்நாள்-முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,கழக முன்னோடிகள்,கழக உடன்பிறப்புகள் அனைவரும் அலைகடலென திரண்டு வந்து பெரும்திரளாய் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறாக அறிக்கையில் கூறியுள்ளார்.




Comments