top of page
Search

திருச்சி என்றாலே பிரமாண்டம்! பிரமாண்டம் என்றால் கே.என்.நேரு!! முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாராம்...

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Dec 30, 2022
  • 3 min read
ree
ree
ree

மணவை, எம்.எஸ்.ராஜா...


திருச்சியில் எந்த விழா நடந்தாலும் அது பிரமாண்டமாக தான் நடக்கும். சிறிய விழாவாலும், பொதுக்கூட்டமானாலும் மாநாடு போன்றுதான் நடக்கும், மாநாடு என்றால் அதுவும் மிக பிரமாண்டமாகத்தான் நடக்கும், அப்படி நடந்தால் அது திருச்சி, அப்படி நடத்தினால் அதுதான் கே.என்.நேரு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி அரசு விழாவில் கூறினார்......


திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற,அரசு விழாவில், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு௹.238.48 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5.635.திட்டப் பணிகளை தொடங்கிவைத்து,௹ 308.29 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டி, 22.176. பயனாளிகளுக்கு ரூ.79.06 கோடி மதிப்பீட்டில்நல திட்ட உதவிகள்.2.764 மகளீர் சுயஉதவிக்குழுக்களின் 54.654 பயனாளிகள் பயன்பெறும் வகையில் வங்கி கடன் இணைப்பு, 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது, 8.வங்கியாளர்களுக்கான சிறப்பு விருதுகள் ஆகியவற்றை வழங்கினார் விழாவில்

தொடர்ந்து தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது......


ree

ree
ree

திருச்சியில் எந்த விழா நடந்தாலும் அது பிரமாண்டமாக தான் நடக்கும். சிறிய விழாவாலும், பொதுக்கூட்டமானாலும் மாநாடு போன்றுதான் நடக்கும், மாநாடு என்றால் அதுவும் மிக பிரமாண்டமாகத்தான் நடக்கும், அப்படி நடந்தால் அது திருச்சி, அப்படி நடத்தினால் அது கே.என்.நேரு, அரசு விழா என கூறி, இப்போது இங்கு அரசு மாநாட்டை நடத்தி வருகிற நகர்புற நிர்வாக அமைச்சர் கே.என்.நேருவை மீண்டும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்......

தமிழ்நாட்டின் தொழில்துறை என்பது முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை நோக்கி புதிய தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலக நிறுவனங்களும் வர தொடங்கியிருக்கிறது. புதிய துறைகளில் முதலீட்டுகளை நாம் ஈர்த்து வருகிறோம். திமுக ஆட்சி அமைந்ததும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு தற்போது ஒருகோடி பேரை அந்த திட்டம் மூலம் எட்டப்பட்டுள்ளது.

இந்த மேடைக்கு, அமைச்சரவைக்கு புதியவராக வந்துள்ள உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள், பொதுமக்களாகிய உங்களுக்கு பழைய முகம் தான். அவர் அமைச்சரான போது விமர்சனம் வந்தது. அப்போது என்னுடைய செயல்பாட்டை பார்த்துவிட்டு விமர்சியுங்கள் என்றார். அதேபோல் எம்.எல்.ஏ. ஆகும் போதும் விமர்சனம் வந்தது. ஆனால் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் அனைவரது பாராட்டைப் பெற்று நிரூபித்து காட்டினார்.

அவருக்கு ஏராளமான பொறுப்புகள், அதாவது முக்கிய துறைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பொறுப்பிலேயே சிறப்பாக பணியாற்றி இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது.....

ree
ree
ree
ree

தொழில்துறையில் மிக வேகமாக புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வரத்தொடங்கியுள்ளது. மேலும் ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழக வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில், தமிழகத்தில் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம் 4 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் கடந்த ஜனவரி, 24-ந் தேதிசட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்திருந்தேன். அதனை நடைமுறைப்படுத்தும் வண்ணம் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் .1989ம் ஆண்டு தரும்புரி மாவட்டம் சாமன பள்ளி கிராமத்தில் முத்தமிழறிஞர் கலைஞரால், இந்தியாவிற்கே முன்மாதிரியாக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. இதன்மூலம் பெண்கள் வாழ்வாதரத்தில் உயர்ந்து, சுயதொழில்கள் தொடங்கும் ஆர்வமுடன் தொழில்முனைவோர்களாகவும் உருவானார்கள்.......

அதன்பின் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் காரணத்தால், சுயஉதவிக்குழுக்களுக்கான திட்டங்கள் சரிவர செயல்படுத்தவில்லை தேர்தல் நேரத்தில் நான் சென்ற பகுதிகளில், மீண்டும் மகளீர் சுயஉதவிக்குழுக்களை ஊக்கப்படுத்தி, பெண்களுக்கான பயனளிக்கக்கூடிய திட்டங்களை புத்துயிர் ஊட்டி கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பின் ஏற்பட்ட கழக ஆட்சியில் மகளீர் சுயஉதவிக்குழுக்கள் திட்டங்கள் விரைவு படுத்தப்பட்டு, இன்று மீண்டும் மகளீர் வாழ்வாதரங்களை தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன் வங்கிகளின் ஒத்துழைப்பை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு விருதுகள், சிறந்த மகளீர்சுயஉதவிக்குளுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டு அவர்களை துரிதமாக உற்சாகப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.....

சமூகத்தில் சரிபாதியான மகளீர் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களை வகுப்பதில், செயல்படுத்துவதில், கழக ஆட்சி அமையும்போதெல்லாம் முனைப்போடு பணியாற்றி வருகின்றோம்..........

ree
ree
ree

அதேபோலஅரசு பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு வரும் மாணவியர்கள் அரசு ஊக்கப்படுத்தி உதவிதொகைகள் வழங்க நடவடிக்கை எடுக்க தொடங்கியதால் கடைகோடியில் வாழும் பெண்கள் வாழ்வாதாரத்திலும், உயர்கல்வியிலும் உயரத் தொடங்கியுள்ளார்கள். நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் முன்னேற்றம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. என்பதை உணர்ந்து பணியாற்றி வருகிறோம். ஆட்சி பொருப்பேற்ற குறுகிய காலத்தில் மழை, வெள்ளம், மக்களை பாதிக்காதவகையில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது இதை எவரும் பாராட்டுவதற்காக நாங்கள் செய்யவில்லை, எங்களின் கடமையைத்தான் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் விரைவாக செய்து வருகிறோம். தமிழ்நாட்டையும், தமிழர்களையும் உயர்த்தும் வகையிலான எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டுமென்கிற கொள்கையோடு, நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சி மீது எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும், கொள்கையிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுத்தி கொண்டுவருகின்றோம். தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய நமது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை இந்தியாவில் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் செயலாற்றி வருகின்றோம். காலநிலை கொள்கையை வகுக்க இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழ்நாடு செயலாற்றி முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.கொரோனா நோய் என்னை தாக்கியபோதும் என்னுடைய மக்கள் பணிகளை நான் நிற்க விடவில்லை......

ree

கடந்த ஒர் ஆண்டுகாலத்தில் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 559 கிலோமீட்டர் பயணம் செய்து. 647. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன், இதில் அரசு நிகழ்ச்சிகள் 557. கட்சி நிகழ்ச்சி 96. இப்படி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிகளின் மூலம் ஒரு கோடியே 3. லட்சத்து 355 பேர்கள் பயனடைந்துள்ளார்கள், நெம்பர் ஒன் முதல்வர், மாநிலம் என்பதன் அளவுகோல் பேரறிஞர் அண்ணா கூறியதுபோல் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்கிற கொள்கையின் அடிப்படையில், ஏழைகள் அடித்தட்டு மக்கள், மகளீர் சுயஉதவிக்குழுவினர்களை ஏற்றமடையச் செய்து, அவர்களின் முகத்தில் ஏற்படும் உண்மையான புன்னகையில்,பேரறிஞர் அண்ணாவோடு. முத்தமிழறிஞர் கலை ஞரையும் காண்பதுதான் எங்கள் கொள்கை, அந்த வகையில்உண்மையான மக்கள் பணியாற்றுவதுதான், இந்த அரசு, இது மக்களின் அரசு, மக்களுக்கானப் பணிகள் எத்தகைய இடையூறுகள் விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறாக அவர் பேசினார்......

ree
ree

விழாவில் தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.தி.மு.கழக முதன்மைச்செயலாளர், சேலம் மண்டல பொருப்பாளர், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா.சுப்பிரமணியன். பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி,நாடாளுமன்ற உறுப்பினர்கள். திருச்சி சிவா, திருநாவுக்கரசர், ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், செளந்தர பாண்டியன், பழனியாண்டி, கதிரவன், இனிகோ இருதயராஜ்.அப்துல் சமது, திருச்சி மேயர் மு.அன்பழகன், கூடுதல் முதன்மை செயலாளர்கள். அமுதா, திவ்ய பிரியதர்சினி,மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மக்கள் பிரநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்தகொண்டனர்.....

ree
ree
ree

தொடர்ந்து, மணப்பாறை மொண்டிபட்டி காகித ஆலையில் அலகு 2. தொழிந்சாலையை திறந்துவைத்தபின்னர், கண்ணுடையான்பட்டி கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்காவையும் திறந்துவைத்தபின்னர் சன்னாசிப்பட்டியில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்னாவது நபரான சரோஜா என்பவரது வீட்டிற்கே நேரில் சென்று மருத்து பெட்டகத்தை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்பின் அங்கு நடைபெற்ற முகாம் பணிகளை ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து கவனித்து, மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றுகள், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


முன்னதாக விமான நிலையம் வந்த முதல்வருக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றஅண்ணா ஸ்டேடியம்,மொன்டிப்பட்டி. சன்னாசிப்பட்டி உள்ளிட்ட 40 கிலோமீட்டருக்கும் மேலாக சாலைகளின் இருபுறங்களிலும் மக்கள் பெரும் திரளாக கூடி நின்றுதொடர் உற்சாக வரவேற்பும் முதல்வருக்கு அளிக்கப்பட்டது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page