திருச்சி; அரசு மருத்துவமனையில் ரூ 2 கோடியில் வளர்ச்சிப்பணிகள் !அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்
- உறியடி செய்திகள்

- Apr 5, 2023
- 1 min read


திருச்சி மண்டலத்தில் சுமார் 6 மாவட்டங்களுக்கான அரசு மருத்து மேல்சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய அங்கம் வசிக்கின்றது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்றால் மிகையில்லை.
நாள் ஓன்றுக்கு பல்லாயிரக்கணக்கா னோர் புறநோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வரும். இங்கு அனைத்துத்துறைகளிலும் சிறப்பு மருத்துவர்கள் பணியாளர்களையும் கொண்டதாகும்...
இம்மருத்துவ வளர்ச்சி என்பது தி.மு.கழக ஆட்சி அமையும் போதெல்லாம் அபரிதமாகவும் மிக நேர்த்தியாகவும் வளர்ச்சியுற்றும் வருகின்றது....
மருத்துவமனை தேவைகளையும், இதர அனைத்து தரப்பு வசதிகளையும், முத்தமிழறிஞர் கலைஞரின் காலத்திலும் சரி, இன்றைய தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு மருத்துவமனை வளர்ச்சியும். அதன்மூலம் தி.மு.கழகத்திற்கும் - ஆட்சிக்கும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் உயரிய மதிப்பை ஏற்படுத்தி இன்றும் வருபவர், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மண்டல பொருப்பாளர், தமிழக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், கே.என்.நேரு...

இந்நிலையில்திருச்சி அரசு மருத்துவமனையில் ரூபாய்.2 கோடி மதிப்பீட்டிலான மருத்துவ எந்திரங்களை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி, ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூபாய் 1.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரங்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், திருச்சி மாநகர ஆணையர் வைத்திநாதன், மாநகர தி.மு.கழக செயலாளர், மாநகரமேயர் மு.அன்பழகன்,அரசு மருத்துவமனை டீன் நேரு, சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி ,அந்தநல்லூர் சேர்மன் துரைராஜ்,பகுதி செயலாளர்கள் கே.எஸ்.நாகராஜ்,
காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ, முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம்,வண்ணை மோகன், புத்தூர் பவுல்ராஜ்,கவுன்சிலர்கள் விஜயலட்சுமி,புஷ்பராஜ்,கலைச்செல்வி, விஜயா ஜெயராஜ், மற்றும் வக்கீல்கள் பாஸ்கர், மணிவண்ண பாரதி, அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...




Comments