திருச்சி: பள்ளி சிறார்களுக்கான காலை சிற்றுண்ண்டி திட்டம்! கொச்சைபடுத்தியதை கண்டித்து ஆர்பாட்டம்!
- உறியடி செய்திகள்

- Sep 2, 2023
- 1 min read
Updated: Sep 3, 2023

மூத்த பத்திரிக்கையாளர் ராஜா....
திருச்சியில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள பள்ளி சிறார்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை, கொச்சைபடுத்தி விமர்சனம் செய்ததாக தினமலர் பத்திரிக்கையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளியில் படிக்கும் எளிய மக்களின் குழந்தைகளுக்கு அரசு செயல்படுத்திவரும் திட்டமான பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை நையாண்டி செய்து குழந்தைகள் உணவு உண்ணும் உரிமையைக்கூட தடுக்க பார்ப்பனிய சிந்தனை மேலாதிக்கத்துடன் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் அலுவலகம் மீது மலம்வீசும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது.


இதனை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் கா ஜெகநாதன் தலைமையில் திருச்சி தினமலர் நாளிதழ் அலுவலகத்தின் மீது மலக்கழிவு வீசும் போராட்டம் நடந்தது.
மாநகரத் தலைவர் வின்சென்ட் ஜெயக்குமார், தொழிற்சங்க தலைவர் கு.வீரன், திருவரங்கம் பகுதி செயலாளர் பிரபாகரன், கொண்டையம்பேட்டை காமராஜ் ராஜாங்கம் லால்குடி மணிவாசகம் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் ஜீவா லதா உள்ளிட்ட தொழிற்சங்க தோழர்கள் திரளாக பங்கேற்று சனாதன கொள்கைக்கு எதிராக கோஷமிட்டு தினமலர் நாளிதழை தீயிட்டு கொளுத்தி மலக்கழிவுகளை அதன் மீது வீசி போராட்டம் நடத்தினர்.
இறுதியாக
கழக கொள்கைப் பிரச்சார செயலாளர் சீனி. விடுதலை அரசு கண்டன உரை நிகழ்த்தினார்.
முன்னதாக கழக பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் அறிவிப்பின் பேரில் நடைபெற்ற இந்த போராட்டத்தையெட்டி திருச்சி தினமலர் அலுவலகம் மற்றும் ஆசிரியர் ராமசுப்புவின் இல்லம் முன்பு ஏராளமான போலீசார் குளிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை சிற்றுண்டி - முதலமைச்சர் ட்வீட்டரில்
காலை சிற்றுண்டி திட்டம் குறித்து கிருஷ்ணராயபுரம் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி;
இந்த குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய் பரப்புரைகளும் தோற்றோடும் என குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.




Comments