திருச்சியில்49.வது நினைவு நாள், தந்தைபெ.ரியார் சிலைக்கு, அமைச்சர் கே.என்.நேரு- கி.வீரமணி மரியாதை !
- உறியடி செய்திகள்

- Dec 24, 2022
- 1 min read


மணவை.எம்.எஸ்.ராஜா.
தந்தைபெரியாரின் 49 வது நினைவு நாள். திருச்சி மத்தியே பேரூந்து நிலையம் அருகிலுள்ள தந்தைபெரியார் முழு உருவவெ ண்கலச்சிலைக்கு, தி.மு.கழக முதன்மைச்செயலாளர், சேலம் மண்டல பொருப்பாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், கே.என்.நேரு. திராவிடக்கழகத் தலைவர் கி.வீரமணி, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மாநகர மேயர் மு. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள், செந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார். மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா, ஆ.மைக்கேல்ராஜ் உள்ளிட்ட தி.மு.கழகத்தினர் கலந்து கொண்டார்கள்.
கவியரசர் கண்ணதாசனின் 'தந்தைபெரியார்.நினைவு நாள் புகழாராம்.
ஊன்றிவரும் தடி சற்று நடுங்கக்கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை;
தோன்றவரும் வடிவினிலே நடுக்கம் தோன்றும்
துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை!
வான் தவழும் வென்மேகத் தாடி ஆடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார்
எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை!
நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்திவைப்பார்
ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு!
ஆக்காத நாள் இல்லை ஆய்ந்து தேர்ந்து
அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக
தாக்காத பழமையில்லை தந்தை நெஞ்சில்
தழைக்காத புதுமை இல்லை தமிழ் நிலத்தில்!
நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்-
நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்!
கவியரசர்.கண்ணதாசன்.




Comments