திருச்சி: அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு கேள்வி?
- உறியடி செய்திகள்

- Jul 7, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
பாதாள சாக்கடை திட்டம் அறிவித்து நிதி ஒதுக்காதது ஏன்?
அமைச்சர் நேரு கேள்வி!
தி.மு.கழக முதன்மைச்செயலாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், சேலம் மாவட்ட பொருப்பு அமைச்சர், கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது!
தி.மு.கழகத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சிகாலத்தில்தான் திருச்சிதனித்தன்மையுடன் ஒளிரவும் மிளிரவும் தொடங்கியது.!

புதிய பொறியியல் கல்லூரிகள், ஐ.ஐ.எம்.நிறுவனம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற புதிய கட்டிடம், இப்படி எண்ணற்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டது.
இப்போது, ஆட்சி பொறுப்பேற்ற இந்த குறுகிய காலகட்டத்தில், கழகத் தலைவர். முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தனிப்பட்ட சுவனத்துடன், திருச்சிக்கு 100 டி.எம்.எல்.சி குடிநீர், கூடுதலாக மேலும். 100.டி.எம்.சி. குடிநீர் சாலைகள் மேம்படுத்து தல், மேம்பாலங்கள் போதிய தரத்தோடு நிறைவேற்றபட்டது.
திருச்சியில் ரூ 388. கோடியில் புதிய பேருந்து முனையம் ரூ.100 கோடியில் புதிய சந்தை ரூ 600 கோடியில் தொழில் பூங்கா என தீவிரமாக புதியவளாச்சித்திட்டபணிகள் நடைபெற்று வருகின்றது.
இதனை தொடர்ந்து நீதிமன்றம் அருகிலிருந்து அல்லித்துறை வரை புதியசாலை அமைக்கும் பணியும், உய்யகொண்டான் ஆற்றில் நீதிமன்ற அருகில் புதிய உயர்மட்ட பாலமும் அமைக்கப்படவுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறையும்,

இதேபோல திருச்சி சிந்தாமணி முதல் குடமுருட்டி வரை உயர்மட்ட பாலமும் அமைக்கப்படவுள்ளது. இப்படி பெரும்பாலான மக்களுக்கான பயன்தரும் திட்டங்கள் அனைத்தும். முத்தமிழறிஞர் கலைஞர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழக ஆட்சிகாலத்தில்தான் நிறைவேற்றப்பட்டு வருகின்றது!.

அதேசமயம் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் என்ன?
எம். ஜி.ஆர். காலத்தில் தொடங்கபட்ட, டி.என்.பில். அதன் இரண்டாவது யூனிட்டை ஜெயலலிதா தொடங்கிவைத்தார். தேசிய சட்டப்பள்ளி கொண்டுவந்தார் என்பார்கள்.!
கடந்தஅதிமுக, ஆட்சியில்பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை அறிவித்து. நிதியைக் கூட ஒதுக்கீடு செய்யவில்லை.
தி.மு.கழக ஆட்சி அமைந்த பின்தான் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.
முன்னதாக , சமயபுரம் மாரியம்மன் கோவிலில், இந்து அறநிலைத்துறை சார்பில். 10. ஜோடிகளுக்கு இலவச திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து
உறையூர் பகுதி லிங்கநகரில் புதிய ரேசன்கடையை திறந்து குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டுக்கும் திறந்துவைத்தார் அமைச்சர் நேரு.
மாநகர மேயர் மு.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன் ஸ்டாலின் குமார், மாவட்டத்துணைச்செயலாளர் முத்துச்செல்வன்,
டோல் கேட் சுப்பிரமணியன், தில்லைநகர்கண்ணன். பகுதி செயலாளர்கள் இளங்கோ.நாகராஜ், உட்பட துறைசார்ந்த அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.




Comments