top of page
Search

திருச்சியில் மேயர் அன்பழகன் அதிரடி ஆய்வு! வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தல்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Sep 9, 2023
  • 1 min read
ree

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா



திருச்சி. வளர்ச்சிப் பணிகளை, மேயர் அன்பழகன் அதிரடி ஆய்வு! ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறை ஆலோசனைகளும் வழங்கினார்.! பொதுமக்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்!

ree

தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படியும். தி.மு.கழக முதன்மைச் செயலாளர். சேலம் மாவட்ட பொருப்பு அமைச்சர் தமிழக நகராட்சி நிருவாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை - வழிகாட்டல்களின் படியும்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 5வது மண்டலம், 27வது வாடு மூலை கொல்லை தெரு மாநகராட்சிஉருது பள்ளி ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டில் 23 ஆயிரம் சதுர அடியில் மூன்று வகுப்பறைகள், ஒரு தலைமை ஆசிரியர் அரை, நூலகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ், சமையல்அறை மற்றும் கழிவறைகளுடன் கூடிய பள்ளி கட்டிடம் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


பணிகள் நடை பெற்று வரும் பகுதியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை மேயர் .மு. அன்பழகன் சம்மந்தப்பஅலுவலர்களுடன் திடீர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்!.

ree

தொடர்ந்து பென்சினர் தெருவில் ஜெனரல் பஜார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ரூபாய் 59 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாபு செட்டி தெருவில் நியாய விலை கடை கட்டுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டார்.!


இதனையடுத்து 26 வது வார்டு இராமலிங்க நகர் 2வது, 3வது மற்றும் நான்காவது தெருகளில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்து சாலையை தரமாகவும் உரிய அளவுகளின் படி சாலை அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.!


திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எனதுகுப்பை_எனதுபொறுப்பு எனும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மண்டலம் 5,க்குட்பட்ட 13வார்டுகளில்  கழிவுகளை தரம் பிரித்தல் குறித்தும், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து துணிப்பை பயன்படுத்த அறிவுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய 13தூய்மை பணியாளர்களுக்கு ஐந்தாவது மண்டல அலுவலகத்தில் மாநகர தி.மு.கழகச் செயலாளர், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார் .!

ree

முன்னதாக 25வது வார்டு ஆர்சி பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு திருச்சி இயன் முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பார்வையிட்ட மேயர் அன்பழகன் பொதுமக்கள் குறைகள் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, சம்மந்தபட்ட துறை அதிகாாரிகள் உரிய நடவடிக்கையினை விரைந்து எடுக்கவும் வலியுறுத்தினார்!


மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா,இளநிலை பொறியாளர் பிரசாத்மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள்  மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடன் சென்றனர்..


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page