தூத்துக்குடி: சைபர்கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கம்! கவிஞர் கனிமொழி கருணாநிதி தொடங்கிவைத்தார்!
- உறியடி செய்திகள்

- Aug 23, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா...
தூத்துக்குடி: சைபர்கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கம்! கவிஞர் கனிமொழி கருணாநிதி தொடங்கிவைத்தார்!
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் (NCSRC) சார்பில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.!

இதில் தி.மு.கழகத் துணைப்பொதுச்செயலாளர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,, தி.மு.கழக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கவிஞர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்து சைபர் குற்றச்செயல்கள் குறித்தும், பெண்கள் விழிப்புணர்வு குறித்தும் விளக்க உரையாற்றினார்!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் .ஜெகன் பெரியசாமி, மகளிர் ஆணையத் தலைவர் .குமரி விஜயகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பாலாஜி சரவணன், NCSRC இயக்குனர் .காளிராஜ், கல்லூரி செயலர் .சோமசுந்தரம், கல்லூரி முதல்வர் பூங்கொடி மற்றும் ஏராளமானகல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்!




Comments