தூத்துக்குடி துப்பாக்கிசூடு கிரிமினல்தனமானது! எடப்பாடியே முழுப்பொருப்பு!! சி.பி.எம்.குற்றச்சாட்டு!!!
- உறியடி செய்திகள்

- Oct 22, 2022
- 1 min read

அதிமுக ஆட்சியில்ஸ்டெர்லைட் நிருவனத்திற்கு ஆதரவாக நடந்த துப்பாக்கி சூடு படுகொலைகள் கிரிமினல்தனமானது!
எடப்பாடி பழனிசாமியே முழுப் பொருப்பேற்க வேண்டும்!
கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு!
கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான நடைபெற்ற 100,வது நாள் போராட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற பல்வேறு அமைப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நோக்கி துப்பாக்கி நடத்தப்பட்டது.
இதில் 13 க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக, காவல்துறை நடத்தியதுப்பாக்கிசூட்டில் படுகொலை செய்யப்பட்டனர்........

இதுகுறித்து, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்பவம் பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும், டி. வி.யில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டதாகவும் கூறினார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் ஒன்றையும் அமைத்தார்.
அதன் பின்நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மையுடன் தி.மு.கழக ஆட்சிமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்தது.
இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முடிவுற்ற, விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அருணா ஜெகதீசன் வழங்கினார்.
இதனையடுத்து, ஆணைய அறிக்கை முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அன்றைய தூத்துக்குடி கலெக்டர், ஐ.ஜி. டி.ஐ.ஜி.எஸ்.பி. உள்ளிட்ட 17 பேர் மீது நேரடி குற்றசாட்டுகள் உள்ள தகவல்கள் வெளிவந்தது. அவர்களின் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுமிருந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு தனது முதல்கட்ட நடவடிக்கையினை எடுத்துள்ளது.

இந்நிலையில்
மார்க்ஸிஸ்ட் கம்மி யூஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர், கே.பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது.
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார்.
இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பதுடன், சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்த போக்கு கிரிமினல் தனமான ஒன்று. தமிழ் நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள்.
இவ்வாறாக அவர்பதிவிட்டுள்ளார்.
உறியடி செய்தி குழுவினர்




Comments