தூத்துக்குடி, காவல் பணியில் குற்றங்கள் தடுக்கவே மாற்றுப் பணி! எஸ்.பி.பாலாஜி சரவணன் முயற்சி!
- உறியடி செய்திகள்

- Jun 10, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
காவலர்கள் தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகமாக மாற்றி நடந்தால்,
ஆயுதப்படைக்கு மாற்றம் : காவல்துறையினருக்கு மன நல ஆலோசனை!
தமிழக அரசுக்கு பெரும் சவாலாகயிருந்து வரும் பல்வேறு பிரச்சனைகளுள், காவல்துறை பணியாளர்களாால் பலரும் பாதிக்கப்பட்டுவரும் சம்பவங்கள் அரசின் செயல்பட்டை விமர்சிக்க வைக்குமலவுக்கு ஒரு கட்டத்தில் சென்றுவிடுகிறது!
இந்நிலையில் காவல்துறையினரால் ஏற்படும் சர்ச்சைகளில், முக்கிய அங்கம் வசிக்கும் தூத்துக்குடியில், இதற்கு மாற்று நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்!
தூத்துக்குடி, காவல் பணியில் குற்றங்கள் தடுக்கவே மாற்றுப் பணி! எஸ்.பி.பாலாஜி சரவணன் முயற்சி!
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் தமது பணியில் முறை பிறழ்ந்து நடந்ததால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட காவல்துறையினருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அஜாக்கிரதையாகவும், அசட்டையாகவும் பணியில் ஒழுங்கினமாகவும் செயல்படும் பழக்க வழக்கங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக சில காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு, பணியிலிருந்து வரும் காவலர்கள், அவர்களின் தவறை உணர்ந்து எதிர்காலத்தில் அவர்களை திருத்தி ஒழுங்கான முறையில் பணியாற்றி சமூகத்தில் காவல்துறையின் அந்தஸ்தை உயர்த்துவதற்காகவும், மக்களிடம் கனிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் மன நல மருத்துவர் சிவசைலம் மன நல ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் ஆயுதப்படைக்கு தண்டனையாக பணி மாற்றம் செய்யப்பட்ட காவல்துறையினருக்கு, அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி, அதனால் காவல்துறைக்கு சமுதாயத்தில் ஏற்பட்ட களங்கத்தையும் எடுத்துரைத்து, காவல்துறையில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து விடுபடுதல் உட்பட பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி, காவல் பணியில் குற்றங்கள் தடுக்கவே மாற்றுப் பணி! எஸ்.பி.பாலாஜிசரவணன் முயற்சி! வெற்றிப் பெறுமா? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!




நல்ல முயற்சி.. வெற்றியடைய
வாழ்த்துக்கள்...
நம்புவோம்.. நம்பிக்கையே வாழ்க்கை..