தூத்துக்குடி: ரூ.71. லட்சத்தில் கூடுதல் மருத்துவமனை கட்டிடப்பணி!கனிமொழி கருணாநிதி தொடங்கிவைத்தார்!
- உறியடி செய்திகள்

- Jun 25, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் மணவை ராஜா....
தூத்துக்குடி அருகே ரூ.71. லட்சத்தில் கூடுதல் மருத்துவமனை கட்டிடப்பணி!கனிமொழி கருணாநிதி தொடங்கிவைத்தார்!
தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர் குழுத் துணைத் தலைவர் கவிஞர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும், மக்களுக்காக வளர்ச்சித்திட்டப் பணிகள், பழங்கலைகளை மீட்டெடுப்புப் பணிகள், கடல்சார் வாழ் மக்கள், ஏழை எளியோர் நடுத்தர மக்கள் குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் வாழ்வாதாரம் உள்ளிட்ட மக்களின் முன்னேற்றம், பாதுகாப்பு, வாழ்வாதரம், உள்ளிட்டவற்றில் தனி கவனம் செலுத்தி வருகின்றார்...!

மேலும் தி.மு.கழக வளர்ச்சிப் பணிகளில் தமிழ்நாடு முழுவதிலும் பங்கெடுத்துவரும், கவிஞர் கனிமொழி, தனித்துவத்துடன் திகழும் இளம் பெண்கள் சமூக சேவைகளில் பணியாற்றும் பெண்கள் பள்ளிக் கல்லூரி மாணவியர்களிடையே பெண்கள் விழிப்புணர்வு, பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பொருட்டு நடைபெறும் அகழாய்வுப் பணிகள், ஒன்றிய, மாநில அரசு திட்டப் பணிகளை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகள் உள்ளிட்ட மேலும் பொது நிகழ்வுப் பணிகளிலும் ஆர்வமுடன் தொடர்ந்து தனது எளிமையான அணுகுமுறை. மனிதநேயம் பிறரை யும் தன்னைப் போல் நேசிக்கும் தன்மை, கழகத்தின் நிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை,அனைவரையும் தி.முகழகத்தில் உற்சாகப் பணியாற்ற தூண்டுகோளாக செயல்பட்டும். அதேசமயம் அரசு நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளிலும், கவிஞர்கனி மொழிகருணாநிதி அனைவரின் நம்பிக்கையும் ஆதரவையும் தொடர்ந்து பெற்று வருகின்றார்.என்றால் அது மிகையில்லை!


இந்நிலையில், தொடர்நிகழ்வுகளான திருச்சி, கோவை மாவட்டங்களில்தி.மு கழகம் சார்பான, மற்றும் பொது நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தொடர்நிகழ்வாக .....!
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில், ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ஜூன்,25, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு , ரூ.71 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதியக் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்....!
இதனை தொடர்ந்து நடந்த விழாவில், அரசின் சாதனைகளையும், மக்கள்நலத்திட்டங்களையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துவரும் மக்கள் நல அரசுப் பணிகள் குறித்தும் விரிவாக பேசினார்...
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழகமீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்....




Comments