அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின். விமர்சனங்களுக்கு மக்களுக்கு பணியாற்றுவதன் மூலம்பதிலளிப்பேன்! சூளுரை!!
- உறியடி செய்திகள்

- Dec 14, 2022
- 2 min read
Updated: Dec 15, 2022

தமிழ்நாடு தி.மு.கழக அமைச்சரவை யில்,அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின், என்மீது தொடுக்கப்படும் விமர்சனங்களுக்கு. எனது மக்கள்நலப்பணிகள் மூலம் நிச்சயம் பதிலளிப்பேன் என்றும் சூளுரை!
தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அரசு பதவியேற்பு விழாவில், தி.மு.கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது தயார் துர்கா ஸ்டாலின், தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர். நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்கள் குழுத் தலைவர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர்கனிமொழி கருணாநிதி, தொழிலதிபர் சபரீசன், உள்ளிட்ட குடும்பத்தினர்கள், உறவினர்கள் - முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்து பெற்றார்..

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு-சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது.
வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். அமைச்சராகப் பொறுப்பேற்றதால் கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. எனது கடைசி திரைப்படம் மாமன்னன் தான். நடிகராக எனது கடைசி திரைப்படம் அது தான்.

என் மீது விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆரோக்கியமான ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். அதேநேரம் அத்தகைய விமர்சனங்களுக்கு எனது மக்கள் நல செயல்பாடுகள் - பணிகள், மூலம் உரிய பதில் அளிப்பேன்.
அனைவருடைய ஒத்துழைப்போடு என்னால்,முடிந்தவரை அமைச்சர் பதவியின் மூலம் மக்களுக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சிறப்பாகச் செயல்படுவேன்.

விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையிலான பணிகளை தொடர்ந்து, தீவிரமாக முன்னெடுக்கப்படும் . தமிழ்நாட்டினை, தி.மு.கழகத் தலைவர், முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின், வழிகாட்டுதலோடும், மூத்த அமைச்சர்களின் ஆலோசனைகளோடும். விளையாட்டுகளின் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவோம்
தி.மு.கழக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததை. நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன்.....

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போல் ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற உரியநடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறாக கூறினார்.
அமைச்சராக பொறுப்பேற்றபின் முதன்முதலாக இன்று,தலைமைச்செயலகம் சென்ற அமைச்சர்உதயநிதி. ஸ்டாலின், தனது துறை பணிகளை தொடங்கும் முன்னர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பணிநிமித்தமான வாழ்த்துப் பெற்றார்.

இதனை தொடர்ந்து தி.மு.கழக பொதுச் செயலாளர். நீர்வழி-கனிம வளத்துறை அமைச்சர், துரை-முருகன். முதன்மைச் செயலாளர்.சேலம் மண்டல, தி.மு.கழக பொறுப்பாளர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள். கடலூர் (கி) மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், விழுப்புரம் மாவட்ட செயலாளர். உயர்கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் க.பொன்முடி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்.. தமிழக , வருவாய் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இந்து அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு, கைத்தறித் துறை அமைச்சர், எம்.ஆர்.காந்தி. ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி. உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்றார்கள்....

அதன்பின், தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாடு-சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின், அரசின் சார்பில்
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைரூ.3,000இல் இருந்து ரூ.6000ஆக உயர்த்தியும்,
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தும், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கு ரூ.4 லட்சம் வழங்கவும், தனது துறைசார்ந்த முதல் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றி
அமைச்சர்கள், துரை - முருகன், கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உடனிருந்தார்கள்.

இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உள்ளனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராக்க அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ்., சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளராக உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரக கடன்கள் துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ்., ஆகியோர் உள்ளனர்.
இந்த 3 துறைகளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 3 துறைகளின் செயலாளர்களாக உள்ள 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணவை.எம்.எஸ்.ராஜா....




Comments