top of page
Search

வேளாண்மை பல்கலைகழகத்தில் முதுகலைமுனைவர் பட்டப்படிப்புமாணவர் சேர்க்கை தொடக்கம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 20, 2023
  • 1 min read
ree



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கை தொடக்கம்.....


தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியும், தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், தருமபுரி மண்டல தி.மு.கழக பொருப்பாளர், கடலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனைகளின்படியும்.


தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் வாயிலாக 11 கல்வி வளாகங்களில் 33 துறைகளில் முதுகலைப் படிப்பையும், 28 துறைகளில் முனைவர் பட்டப்படிப்பையும் வழங்குகிறது. 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயல்முறை 19.04.2023 அன்று முதல் தொடங்குகிறது. இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

19.04.2023 அன்று முதல் தொடங்கி 15.05.2023 (நள்ளிரவு மணி 11.59 மணி) வரை மட்டுமே விண்ணப்பதார்கள் இணையவழி வழியாக முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்.

ree

இளமறிவியல் (வேளாண்மை) மற்றும் அதன் சார்ந்த படிப்புகள் முடித்த மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பிற்கும் முதுகலை (வேளாண்மை) அல்லது தோட்டக்கலை எம்.டெக் (வேளாண் பொறியியல்) முடித்த மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்பிற்கும், பட்டப்படிப்பு சான்றிதழ் சமர்பிப்பதன் மூலமாக, தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். எனினும், பட்டப்படிப்பு சான்றிதழில் சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

மேலும், விபரங்களுக்கு முதுநிலை மாணவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கை குறித்த தகவல் கையேட்டை படிக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உரிய நேரத்தில் விண்ணப்பங்களைச் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர் சேர்க்கை தொடர்பான ஐயப்பாடுகளுக்கு pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நேரடியாக தொடர்புக் கொள்ள 98489056710 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page