உஷ் உஷ்....! சத்தமில்லாமல் விளையாட்டிலும் சர்தார்களை தரும்!! உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ....
- உறியடி செய்திகள்

- Oct 26, 2022
- 1 min read

இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்க படுத்தும், உதயநிதி ஸ்டாலின். எம்.எல்.ஏ........
சேப்பாக்கம். திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிவரும் உதயநிதி ஸ்டாலின். எம்.எல்.ஏ. தி.மு.கழக இளைஞரணியின் செயலாளராக கட்சியின் வளர்ச்சிக்கும், திராவிட வரலாற்றை இன்றைய இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில், கருத்துப்பட்டரைகள், பயிலரங்கள்கள், கருத்தரங்கள், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு பணிகளை தி.மு.கழக வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்துவருகிறார்.
தி.மு.கழகத்தின் நாளேடான முரசொலி நாளிதழ், அறக்கட்டளை நிர்வாகியாகவும் ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுத்து, கட்சியினர் மத்தியிலும், பிற அனைத்து தரப்பினர் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றுள்ளார்.....

திரைத்துறை வாயிலாக, பல்வேறு சமூக சீர்த்திருத்த கருத்துக்களை அடங்கிய திரைப்படங்களில் நடிப்பதுடன், தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் பெயரில் தயாரித்தும், படங்களைவெளியிட்டும் பணிகளை செய்து வருகிறார்.
மேலும் இளைய தலைமுறையினர், கல்வி, விளையாட்டு போன்றவற்றில், நாட்டில் சிறந்து விளங்கும் வகையில் சத்தமில்லாமல் பல்வேறு உதவிகளையும் செய்து அவர்களுக்கு பக்கபலமாகயிருந்து பலரை சாதனையாளர்களாகவும் உருவாக்கியும் வருகின்றார் ........

இந்நிலையில் ரெட் ஜெயின்ட் பட நிறுவனத்தின் ஆதரவுடன் தஞ்சை யை சேர்ந்த இளம்பெண் ரேசி மீனா பால்ராஜ், என்பவர் சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில், வால்போல்ட் விளையாட்டில் 8 வருட சாதனையை முறியடித்து வெற்றிப் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனது விளையாட்டு பயிற்சிக்கு சிறுவயது முதலே மிகவும் பக்க பலமாகயிருந்து, ஆர்வமும், ஊக்கமும் அளித்த வந்த ரெட் ஜெயன்ட் பட நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன்...
தி.மு.கழக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து பாராட்டும் பெற்றார்.....
மணவை, எம்.எஸ்.ராஜா




Comments