top of page
Search

துணைவேந்தர்கள் பணி விநியோகம்! பன்வாரிலால் Vs அதிமுக! அடித்து ஆடிய மாஜி கே.பி.அன்பழகன்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Oct 24, 2022
  • 1 min read
ree

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது துணைவேந்தர்கள் பணி விநியோகம்....பன்வாரிலால் Vs அதிமுக.ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளாரா மாஜி அன்பழகன்!



தமிழகத்தில் பல்கலை துணைவேந்தர் பதவி, 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை கடந்த அதிமுக, ஆட்சியில் விலை பேசி விற்கப்பட்டு வந்ததாக, தமிழகத்தின் அப்போதைய கவர்னரும், தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோஹித் பேசியது, தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் பேசும் பொருளானதுடன் அ.தி.மு.க.,வுக்கு எதிராக வெடிக்கவும் துவங்கி உள்ளது. .......


இநிலையில். மாஜி.கே.பி.அன்பழகன் நியமனத்தில் அப்படி பணம் பெறப்பட்டு இருந்தால், அதற்கு கவர்னராகாருந்த புரோகித்தே முழு பொறுப்பு என கூறியுள்ளது மேலும்பரப்பப்பை ஏற்படுத்தியுள்ளது.....

ree

தமிழகத்தின் கவர்னராக, 2017 - 21 வரை பதவி வகித்தவர் பன்வாரிலால் புரோஹித். பஞ்சாப் கவர்னராக பதவியேற்பதற்கு முன், தமிழகத்தின் கவர்னராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்தேன். அப்போது, அங்கு பல்கலைகளில் துணைவேந்தர்கள் பதவி கள் விற்கப்பட்டு வந்தது. 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

என்று பன்வாரிலால் புரோஹித் கூறிய குற்றச்சாட்டால், அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு மேலும் அதிர்ச்சி, அதிர்வளைகளை அடைந்துள்ளது........

ree

தற்போது,ஜெயலலிதா மரண விவகாரம், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான இரு விசாரணை கமிஷன் அறிக்கைகளில் அதிமுக, நிர்வாகிகள் - அரசின் மீதும்,குற்றம் சாட்டப்பட்டுள்ள

இந்திலையில், தருமபுரியில், முன்னால் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது....


முன்னால் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அதிமுக, ஆட்சியில் பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் வாங்குவதாக ஒரு விழாவில் பேசியதற்கு அப்போதே அவர் கருத்துக்கு மறுப்பு தெரித்து விளக்கமளித்துள்ளேன்........

ree

எடப்பாடி ஆட்சிகாலத்தில் ரூ.40 - 50, கோடி துணைவேந்தர்கள் நியமனத்திற்கு பணம் பெற்றதாக அவர் இப்போது கூறுவதில் உண்மையில்லை. துணைவேந்தரை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானவுடன், தேடுதல் குழு அமைக்கப்பட்டு 10 பேரை தேர்வு செய்து கவர்னருக்கு அனுப்படுகிறது. இதில் 3 பேரை தேர்வு செய்து கவர்னரே நேர்காணல் செய்கிறார். இதில் துறை அமைச்சராகயிருந்த எனக்கோ, அரசுக்கோ எவ்விததொடர்பும் இல்லை. இதில் ரூ.50,கோடி வரை நியமனங்களுக்கு பணம் பெறுவதாக புரோகித் கூறுவதும் ஏற்புடையதல்ல........

ree

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது கவர்னராகயிருக்கும் அவருக்கு, துணைவேந்தர்களை நியமிக்க வாய்ப்பில்லை என்பதால், தமிழகத்தில் நடைபெற்ற 'அதிமுக ஆட்சியை பற்றி குறைகூறுவதை ஏற்க முடியாது.

அப்படி எந்த தவறும் நடந்திருந்தாலும் அதற்கு கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித்தே முழு பொறுப்பு, அவ்வாறாக பணம் கைமாறியிருந்தால் அது கவனராகயிருந்த புரோகித்தயே சாரும். எனவே அவர் கூறுவது தவறான தகவல்....

இவ்வாறாக கூறினார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page