கொள்கைகளை, ஏந்தி ஆல விழுதுகளாய் நிற்கும் தொண்டர்கள்! குமுறுகின்றார்களா தி.மு.கவினர்!
- உறியடி செய்திகள்

- Oct 19, 2023
- 2 min read

ஒரு தொண்டரின் பதிவிலிருந்து மறுபதிவு!
உடுத்த நல்ல உடையில்லை. தன்னையும், குடும்பத்தின் எதிர்காலத்தில் காப்பாற்ற வழியும் இன்றி, கழகம் ஒன்றே தன்னூயிர் என்று வைராக்கியத்துடன் அறிவாலயம் பக்கமே வராமல், தலைமைச் செயலகம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் எங்கோ ஓர் கிராமத்தில் தி.மு.கழகத்தின் கொடியை நட்டு, கொள்கைகளை பறைசாற்றிக் கொண்டிருக்கிறானே அந்த தொண்டனிடமும், ஆதரவு கரம் கொண்டு கழகம் காத்து நிற்கும் அவர்களிடம் சென்று அவர்களது பிரச்சனைகளையும் காது கொடுத்து கேளுங்கள்" என்றார். கழகத் தலைவர் தளபதியார்!.
ஆட்சி கையில்தான் இருக்கிறது. அச்சாணியாக திகழ வேண்டிய நிர்வாகம் நேர் எதிர்திசையில்தான் பயணிக்கிறது. முடிந்த அளவு அரசு பணிகளில் கழகத்தினரை சட்டத்தின் படி நியமிக்க ஏற்பாடு செய்யுங்கள் இதுவே அடுத்த தலைமுறைக்கான முக்கிய ஆதாரமாக அமையும்!

ஏனெனில் !
"ஆட்சி வரும் போகும் அது நிலையல்ல, ஆனால் பேரறிஞர் அண்ணா வகுத்த கொள்கை மாறாது அதுவே நிலையானது" என்றார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்
அப்படி
கொள்கையை தூக்கி சுமக்கத் தான் இங்கே ஆள் தேவை !
வாகனங்களிலும்சட்டை பையிகளிலும் புகைப்படம் வைத்து கொள்ளவும், செல்பி எடுப்பதற்கு கொள்வதற்கும் ஏராளமான ஆட்கள் இருக்கிறார்கள்,! அவர்கள்தான் விளம்பரமாய் நிற்கிறார்கள். மலர்களில் தேன் அருந்தவரும் பருவக்கு பட்டாம்பூச்சிகளைப் போல!

மற்றபடி கொள்கையை பேசி வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க தான் ஆள் தேவை, அப்படிப்பட்டவரின் வீட்டின், பிள்ளைகளின் எதிர்காலம் இன்றைக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது!, இதனையும் கவனத்தில் வையுங்கள் அதுதான் அடுத்த முறை நம் கழகம் ஆட்சியில் அமைவதற்கு மிகப்பெரிய ஆதாரமாக இருக்கும்.
மிகப்பெரிய, முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கார் கண்ணாடியை உயர்த்தி விட்டு யார் என்றே தெரியாமல் செல்வதை பார்த்தால் மனதெல்லாம் வலித்து தான் நிற்கிறது,!
கீழே இருக்கும் அடிமட்ட தொண்டனால்தான் இந்த செளவு யரியங்கள் ! தயவு செய்து மனதில் வையுங்கள்.!

பத்தாண்டு காலம் கழக ஆட்சி இல்லாத நேரத்தில் அரசு வாகனங்களில் காவல்துறை புடை சூழ செல்வதை பார்த்தபோது எங்கள் நெஞ்சமெல்லாம் வலித்தது ஆனால் இன்றைக்கு எங்கள் நெஞ்சங்கள் பூரிப்படுகிறது எங்கள் தலைவர் தளபதியாரை பார்த்து
கழகம் இன்னும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சாதாரண அடிமட்ட தொண்டனை, ஆதரவாளர்களை சற்றாவது நிமிர்ந்து பாருங்கள்.!
தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா.முத்தமிழறிஞர் கலைஞரால். அரவணைக்கப்பட்ட, அடக்கி, ஒடுக்கபட்ட தாழ்த்த பட்ட, இனத்தவர்களின், சாதிகளற்று நாடோடிகளாக வந்த இனத்தவர்கள், அடக்குதலுக்கு அஞ்சி, தங்களையும், வாழ்வாதரத்தையும், காத்து வாழ,திக்கற்ற பழங்குடிகள் உள்ளிட்ட வர்களின் கடைசி நம்பிக்கைத்தான் தி.மு.கழகம்!
என்பதையும் கடந்தகாலங்களில் கழகத்தை வழிநடத்தியவர்கள் இவர்களின் வலிகளையும், உணர்ந்ததால்தான் தி.மு.கழகம் என்கிற ஆலமரத்தின் வேர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட இவர்களால் தான் விழுதுகளாக தாங்கி நிற்கிறது.
என்பதை மனதில் நினையுங்கள்,!

சட்டம் இயற்றி, நிதி ஒதுக்கி, அறிவிப்போடு கடமைகள் முடிவதல்ல!
அது அரசின் அச்சாணியாக செயல்பட வேண்டி ய மாவட்ட நிர்வாகங்கள் அலட்சியபடுத்தி வருவதையும், தி.மு.கழகத்தின் ஆனி வேர்களாக தொண்டர்களும் பூர்வகுடி, பழங்குடி மதம் மாறியவர்களின், சராசரி மனித அடிப்படை உரிமைகளும் கிடைக்காமல் அலைகழிக்கப்பட்டு, அதிகாரமிக்கவர்களின் நேரடி வன்மத்திற்கு உள்ளாகி வருவதையும் இனியாவது கவனியுங்கள்!
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்!
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எப்படி சாத்தியம்.!
ஒரு தொண்டரின் பதிவிலிருந்து மறுபதிவு!
மணவை எம்.எஸ்.ராஜா...




Comments