top of page
Search

எடப்பாடிபதில் என்ன?உட்கட்சி பிரச்சனைகளை தீர்க்க. தமிழக அரசை குறைகூறுவதா! அமைச்சர்கள் சரமாறி கேள்வி?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 24, 2022
  • 2 min read
ree

மணவை, எம்,எஸ்.ராஜா...


ஆளுநர் ரவியிடம் எடப்பாடி கூறிய புகார்கள், உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை. அரசு நிர்வாக செயல்பாடுகள் தெரியாமல், அமைச்சராக முதல்அமைச்சராக எப்படி பணியாற்றினார்.

அமைச்சர்கள், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன் கேள்வி? எடப்பாடி ஆட்சியில்,தூத்துக்குடி துப்பாக்கிசூடு, சட்டம் - ஒழுங்கு சரியாகயிருந்ததா? சமூக ஆர்வலர்களும் கேள்வி? எழுப்பி வருகின்றனர்.....


தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார். ஆளுநரை திரும்பப் பெறுக என ஆளுங்கட்சியான தி.மு.க-வும், அதன் கூட்டணிகட்சிகளும் தொடர்ந்து குரலெழுப்பிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது.

ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தீவிரவாதம் என்று சொன்னாலே அதிகமாக எங்கெங்கு நடைபெறும் என்று உளவுத்துறைக்கு தெரியும். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உரிய முறையில் கவனம் செலுத்தி தடுத்திருக்கலாம். இதையெல்லாம் செய்ய உளவுத்துறை தவறிவிட்டது. இந்த அரசு திறமையற்றது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக போதைப்பொருளை தடுக்க முடியவில்லை. அண்டை மாநிலத்திலிருந்து சர்வ சாதாரணமாக போதைப்பொருள், தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

தி.மு.க ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இன்றைக்கு திராவிட மாடல் என்றால் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்... இதுதான் திராவிட மாடல். அதுதான் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்தத் துறை எடுத்தாலும் லஞ்சம்தான். லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. அதையும், அரசியலில் நடந்த சம்பவங்களையும் சுட்டிக்காட்டி ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். அதேபோல மருந்துத் தட்டுப்பாட்டை அமைச்சரே அதை ஒப்புக்கொண்டு விட்டார். மக்களுடைய வரி பணம் வீணாகிறது. மிகப்பெரிய லஞ்ச ஊழல் இந்த மருந்து கொள்முதலில் இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த சிகிச்சை அளிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. அப்படி பெயர்பெற்ற மாநிலத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது இந்த அரசு.

உள்ளாட்சி அமைப்புகளில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டிலிருக்கும் பணிகளை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த விளம்பரப்படுத்தப்படும் பேனர் விலை 350 ரூபாய். அதற்கு 7,906 ரூபாய் பில் போட்டிருக்கிறார்கள். அரசு இதை ஒரே கம்பெனிக்கு கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது.

அதேபோல டெண்டர் முறைகேடு. எல்லாம், ஒப்பந்தம் விடப்பட்டு பணி தொடங்குவார்கள், பணி முடித்த பிறகுதான் பில் வாங்குவார்கள். ஆனால் இந்த ஆட்சியில் அப்படி இல்லை. ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன் பணி செய்யாமலேயே பில் வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். அதுபோல இந்த ஆட்சியில் ஊழல் நடைபெறுவதற்கு இதுவே மிகப்பெரிய சான்று. கரூரில் ஊழல் நடந்திருக்கிறது. ஒரு சில அதிகாரிகளை மட்டும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு அதிகாரி மூலமாக இது நடக்காது. யாரோ ஒரு அதிகாரமிக்கவருடைய ஆணையின் பேரில்தான் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற முடியும்.

டாஸ்மாக் முறைகேடு பற்றி நான் சொல்லவே தேவையில்லை. முறைகேடாக மதுபான ஆலையிலிருந்து கலால் வரி செலுத்தாமல் கொண்டுவரப்படுகின்ற மதுபான வகைகளை பார்களில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

ஆளுநருக்கெதிரான தி.மு.க-வின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அது எப்போதும் வாடிக்கையாகத்தான் இருக்கும். அவர்களுக்கு ஜால்ரா போட்டால் நல்லவர் என்பார்கள். இப்படி தவறானதை சுட்டிக்காட்டினால் ஆளுநர் மோசம் என்பார்கள். ஆளுநரின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. அவரின் செயல்பாடு நன்றாக இருப்பதினால்தான் இவ்வளவு பெரிய ஊழல் நடைபெறுகின்ற அரசாங்கம் இன்றைக்கு கத்திக்கொண்டிருக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.....

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது (All complaints made by Edappadi Palaniswamy to the Governor are baseless). பொய்களின் மொத்த தொகுப்பை அவர் ஆளுநரிடம் வங்கி உள்ளார்.

அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவு பெற அக்கட்சி தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார் (Edappadi Palaniswami met the party leaders to seek BJP’s support in the internal conflict in AIADMK). பாஜகவில் நடக்கும் உட்கட்சி பிரச்னையை திசை திருப்ப ஒரு கருவியாக மாறி எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்திருக்கிறார் இவ்வாறாக அவர் கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பண், செய்தியாளர்களிடம் கூறும்போது....

எடப்பாடி பழனிசாமி எப்படி அமைச்சராக முதல்அமைச்சராக பணியாற்றினார் என்பது புரியவில்லை, உரிய ஆதாரங்கள் இல்லாமல் உண்மைக்கு முற்றிலும் மாறாக பேசு வருகிறார். அரசு நிர்வாகம், செயல்பாடுகள் பற்றி முதலில் அவருக்கு தெளிவும் புரிதலும். தேவை, கவர்னர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு கொடுத்தது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இவ்வாறாக அவர் கூறினார்.....



அதேசமயம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிகாலத்தில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவ உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு, சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளும் சர்ச்சையை கிளப்பியதற்கு இன்னமும் பதில் தெரியவில்லை பதில்கள் தெரியவில்லையே என்பதும் மறுப்பதற்கில்லை.....

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page