வாழ்வில் மிகச்சிறந்த தருணங்களை- படிப்பினைகளை தருவது எது? இன்றைய சிந்தனைக்கு!
- உறியடி செய்திகள்

- Jan 31, 2023
- 1 min read

இன்றைய சிந்தனை
.............................................
உன் சுபாவத்தை
*எப்போதும்* சூரியனைப் போல்
வைத்திரு.....
*உதயமாவதில் கர்வமும் இல்லாமல், அஸ்தமனத்தில் பயமும் இல்லாமல்*....!
கீழே கிடக்கும் விதைகளுக்குத் தெரியாது .....
*நாம் தான் ஒருநாள் உயர்ந்த மரமாக நிற்போமென்று*....!!!!
*குடும்பம் என்பது கடிகாரம் போன்றது*.....
*மணி முள்* மெதுவாக
இயங்கும் முதியவர்களைப் போல..,.
*நிமிட முள்* விவேகமானது பெற்றோர்களைப் போல.......
*நொடி முள்* துடிப்பானது குழந்தைகளைப் போல....
*யார் ஒருவர் இல்லாத தருணம் நிம்மதியின் அவசியத்தை உணர்கின்றோமோ*....
அவர்களை இழக்காமல் இருப்பது தான் ஆகச்சிறந்த ஆறுதல்....!
அல்லும் பகலும் சுயநலமில்லாது, குடும்ப
நலனுக்காக அசராமல் உழைக்கும் ஏராளமான
மனிதர்கள்....
சமுதாயம் போராளியை
மதிப்பதில்லை.....
பொறுப்புக்களுக்குப்
பயந்து வீட்டை விட்டு
ஓடி தாடி வளர்த்துக் காவி
கட்டி பிச்சையெடுப்பவன்
*சாமி* யாராம்....
*இது வினோத உலகமடா சாமீமீமீ*....!
*அனுதினமும் வலிமையோடு போராடிப் பழகியவர்களுக்கு*....
உயிர் மிச்சம் கொடுக்கும்
நம்பிக்கை....
எதையும் எதிர்கொள்ள
வைக்கும்....!

*நல்ல மனிதர்களிடம் பழக்கம் என்பது*...
*வாசனை திரவியக்கடையைக் கடப்பது போன்றது*....
நாம் வாசனை திரவியத்தை வாங்கினாலும், வாங்காவிட்டாலும் ....
*நம் மீது வாசனை வரும்*.....!
பணக்காரன் ஏழையிடம்
சுரண்டும் போது அது
*வணிகம்*....
அரசு ஏழையிடம் சுரண்டும் போது அது
*வரி*.....
ஏழை அந்த இரண்டிற்கும்
எதிராகப் போராடினால்,
அது *வன்முறை* என
அழைக்கப்படுகிறது....!
நெடுங்காலம் புகைந்து
கொண்டிருப்பதை விட....
ஒரு கணமேனும் பற்றி
எரிவதே மேல்....!
பள்ளமொன்றில் விழுந்த
பின்னர் தான்....
யார் மேலே இருந்து கை
கொடுப்பார்கள்.....
யார் கைதட்டி சிரிப்பார்கள் என்பது
தெரியும்....
மனிதர்களின் மறுபக்கம்
அறிய வீழ்ச்சியும் ஒரு
பாடமே.....!
*எல்லா வலிகளையும்*
வார்த்தைகளால் வெளியே சொல்லி விட
முடியாது.......

*ஓசையின்றி மெளனமாகவே அழுகின்ற ஓராயிரம் வலிகள் இங்கு எல்லோருடைய மனதிலும் உண்டு*.....
ஒரு மனிதன் தனது துயரத்தில் தான்
உண்மையான மனிதர்களை அறிகின்றான்.....
*அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம்*.
*ஆனால் அதன் கட்டணம் தான் அதிகம்*.....!
*சில நேரம் கண்ணீரைத் துடைக்க யாரையோ தேடுகிறோம் நம்மிடம் விரல்கள் இருப்பதை மறந்து*.....!
அறிவுரை என்றால் கசக்கிறது....
அளக்கும் கதை என்றால்
இனிக்கிறது....
இன்றைய தலைமுறைக்கு.....!
அடுத்த நொடி நிச்சயம்
இல்லாத உலகத்தில்
கோபத்தை வெளிக்காட்டி
என்ன பயன்....
நாமும் சிரித்து பிறரையும் சிரிக்க வைத்துச் சென்று
விடுவோம் வந்த இடத்திற்கே.....!
கடினமான நேரங்கள் தான்.....
பெரும்பாலும் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களுக்கு
வழிவகுக்கிறது.....!
'
இனிய வணக்கம் .
.
இயற்கையை பாதுகாப்போம்....
பதிவு மீள்




Comments