top of page
Search

தீட்சதர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால்? அமைச்சர்பி.கே.சேகர்பாபு எச்சரிக்கை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 17, 2022
  • 1 min read
ree

சட்டத்திற்கு புறம்பாக தீட்சிதர் செயல்பட்டால் அரசு நடவடிக்கை..! அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை

சட்டத்திற்கு புறம்பாக தீட்சிதர் செயல்பட்டால் அரசு தனது அதிகாரத்தை செலுத்தும்..என்று அமைச்சர் சேகர்பாபு எச்சரித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில், சென்னை மாவட்ட தி.மு.கழக செயலாளர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , பொதுமக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார்....

ree

இந்நிகழ்வில் மேயர் பிரியா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் கொரனோவுக்கு பின்னர் திருமணம் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரு சில கோயில்களில் திருப்பணிகள் காரணமாக திருமணம் நடத்த அனுமதி மறுத்திருக்க வாய்ப்புள்ளது. எனவே பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் உரிய முறையில் தொடர்ந்து திருமணம் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் இது தொடர்பாக இணை ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.......

ree

சிதம்பரம் நடராஜர் கோயில் யார் பெயரில் பட்டா உள்ளது என்பது குறித்து விவரங்கள் சமர்ப்பிக்கும் அவகாசம் நேற்றோடு நிறைவடைந்துள்ள நிலையில், தீட்சிதர் தரப்பில் அளிக்கும் பதிலை பொறுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிதம்பரம் கோவிலை அரசு கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் எந்த ஒரு செயலிலும் இந்து அறநிலையத்துறை ஈடுபடவில்லை அறநிலையத்துறையின் அதிகாரத்துக்குட்பட்ட திருக்கோயில் என்பதால் அங்கு நடைபெறக்கூடிய நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டும் என்பது அரசின் எண்ணம் . சட்டத்திற்கு புறம்பாக தீச்சதர் தரப்பு செயல்பட்டால் அரசுக்கு உண்டான அதிகாரத்தை நிச்சயம் அறநிலைத்துறை செயல்படுத்தும். அறநிலையத் துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை உரியநடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page