தீப்பெட்டிஉற்பத்தி,தொழில்,வாழ்வாதாரம்காத்திடமுதல்வரின்கோரிக்கைக்கு பதில் என்ன? கனிமொழி எம்.பி.கேள்வி
- உறியடி செய்திகள்

- Dec 13, 2022
- 2 min read

மணவை, எம்.எஸ்.ராஜா...
தீப்பெட்டி உற்பத்தி தொழில். தொழிலாளர் வாழ்வாதரம் காத்திட வலியுறுத்திய தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்களுக்கு எழுதிய கடிதத்தின் மீது ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கவிஞர்கனிமொழி கருணாநிதி, எம்.பி.கேள்வி எழுப்பி வலியுறுத்தி பேசினார்...
புதுதில்லி,
நாடாளுமன்றத்தில், நடைபெ ற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில், தீப்பெட்டி உற்பத்தி தொழில், தொழிலாளர் வாழ்வாதாரம். மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி.வரி விதிப்பால் ஏற்படும் பின்னடைவுகள் குறித்து. தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்கள்க்குழுத் துணைத் தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி கருணாநிதி. Bன்றிய அரசைவலியுறுத்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது .......

இந்திய ஒன்றியத்தில்,நூற்றண்டுகளை கடந்து. ஏற்றுமதியில் அதிக வருவாயை ஈட்டித்தரும் தொழில்களில் தீப்பெட்டி உற்பத்திச் செய்யும் தொழில்மிக முக்கிய அங்கம் வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.
சமீபகாலமாக, தீப்பெட்டிகள் தயாரிப்பு மூலதன பொருட்களின் விலை, ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் கடுமையாக விலையேற்றமடைந்துள்ளது.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் கிலோ ஒன்றுக்கு,௹.40. ஆகயிருந்த கார்ட் போர்டு ரூ.90 ஆகவும், உற்பத்திக்கு தேவையான சிகப்பு பாஸ்பரஸ்,௹,400 லிருந்து, ரூ.1,400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது..........

தீப்பொட்டி உற்பத்தி தொழில் 14. மூலப்பொருட்க்களை உள்ளடக்கி உற்பத்தி செய்வது ஆகும். இந்நிலையில் மூலப்பொருட்க்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், தீப்பொட்டி உற்பத்தித் தொழில் என்பது முற்றிலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
எனது தொகுது உள்ளிட்ட,தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார், 10. லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழில்தான் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்து, அவர்களின் வாழ்வாதரமாக உள்ளது. இந்த தொழில்சார்ந்து 90% சதவிகித பெண்களும் பயன் அடைகின்றார்கள்......

மிகவும் பின்தங்கிய இப்பகுதி மக்களின் ஒரே வாழ்வாதாரமாக இருப்பதும் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழில்தான் என்பதை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு பக்கம் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருட்களின் கடுமையான விலைபேற்றம். மறுபுறம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனாலும் தீப்பொட்டி உற்பத்தி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டும் உள்ளது. இவ்வாறான பாதிப்பு களுடன், தீப்பொட்டி உற்பத்தி தொழில் மீது ஒன்றிய அரசால் விதிக்கப்படும், ஜி.எஸ்.டி.வரியாலும் மேலும். மேலும் பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றது.

தமிழ்நாட்டில் அனைவருக்குமான, எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டுமென்று, திராவிட மாடல் மக்கள்ஆட்சியை முன்னெடுத்துவரும், தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், தளபதி மு.க.ஸ்டாலின், தீப்பெட்டி உற்பத்தி, அதனை சார்ந்து வாழும் லட்சக்கணக்காண மக்களின் வாழ்வாதாரம் காத்திட வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியும் எவ்வித பதிலிம் இன்றி, மெளனம் காப்பது மிகுந்த வேதனைக்குறியதாகும்.......

அனைத்து திசையிலும் பல்வேறு கடுமையான அழுத்தங்களை தீப்பெட்டி உற்பத்தி தொழில்சார்ந்த அனைவரும் சந்தித்து வருவதுடன் தங்களின் வாழ்வாதாரம் பறிபோய்விடுமோ என்கிற உச்சகட்ட . அச்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
எனவே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ட்டிக் லைட்டர்களை தடைசெய்வதுடன், தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலதன பொருட்களின் விலையேற்றத்தின் மீது உரிய நடவடிக்கையை, துரிதமாக எடுத்து இத்தொழில் மீதான ஜி.எஸ்.டி.வரியையும் குறைத்து, இத்தொழில்சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை இனியாவது ஒன்றிய அரசு முனைப்புடன் செயல்பட்டு உறுதிபடுத்த வேண்டும்......
இவ்வாறாக கவிஞர் கனிமொழி கருணாநிதி, எம்.பி.பேசினார்...




Comments