என்ன?பத்திரிக்கையாளர்கள் குரங்குகளா? அண்ணாமலைக்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம்!!
- உறியடி செய்திகள்

- Oct 27, 2022
- 2 min read

குரங்குகள் என்பதா&அண்ணாமலைமீது வலுப்பெறுகிறது பத்திரிகையாளர்கள் கண்டனம்............
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் .அண்ணாமலை ,
தீபாவளி மதுவிற்பனை எண்ணிக்கை குறித்து பேசி விட்டு, இது தொடர்பாக என் மீது வேண்டுமானால் வழக்கு போடுங்கள் , பத்திரிகையாளர்களை மிரட்டாதீர்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறிவுரை கூறியிருந்தார்.
ஆனால் இரண்டு நாட்களுக்குள் இன்று (27-10-2022) வியாழக்கிழமை கடலூரில் செய்தியாளர்கள் கேள்விகேட்க முயன்றபோது ஆத்திரமடைந்து *மரத்து மேல குரங்கு போல தாவித்தாவி சுற்றி சுற்றி வருகிறீர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறார்.
அமைச்சர் செந்திபாலாஜி கூறிய கருத்துக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு
நாய், பேய் சாராயவியாபாரிக்கு எல்லாம் பதில் கூறமுடியாது எனவும் ஆவேசப்பட்டிருக்கிறார்.

அவரது அரசியல் எதிர்வினைகள் குறித்து நாம் விமர்சிக்க வேண்டியதில்லை.ஆனால் .அண்ணாமலை செய்தியாளர்கள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி குரங்குகள் என்று தரக்குறைவான விமர்சனம் செய்திருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது........
உண்மையான பத்திரிகையாளர்கள் அறிவாலயத்திற்கும் அடிமைகளும் இல்லை அவர்கள் கமலாலயக் கூலிகளும் இல்லை .

கட்சி,ஆட்சி என
பத்திரிகையாளர்களை அடையாளப்படுத்தி இழிவுப்படுத்தும் போக்கை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளால் அவமதிக்கப்படும், மிரட்டப்படும், போக்கு அதிகரித்து வருவது வேதனைக்கும், கண்டனங்களுக்கும், உரியது.பொது வெளியில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டியதை மீண்டும் வலியிறுத்துவதோடு பாஜக தலைவர் அண்ணாமலை தமது வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.அதுவே ஆரோக்கிய அரசியலாக அமையும் என்று நம்புகிறோம்*இவ்வாறாக அவர் கூறியுள்ளார்.............

.
இதுகுறித்து ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.எம். தமிழன் வடிவேல் விடுத்துள்ள அறிக்கையில்.....
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிகையாளர்களை "ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..?
மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள்?'' என்று ஒருமையில் பேசியது ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தவே இதுபோன்று தொடர்ந்து பேசி வருகிறார்.

*இது அங்கிருந்த பத்திரிகையாளர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் அசிங்கப்படுத்துவதாகும்,இது ஊடகவியாளர்களாக, ஊடகங்களை தங்களின் உயிராக நினைத்து பணியாற்றி வரும் ஊடகத்துறையினரிடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.*
*அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றாமல் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டுப் பேசிய அண்ணாமலைக்கு ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

*ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முடிந்தால் விடை கொடுங்கள், இல்லையெனில் தவிர்த்து விடுங்கள் ஒரு ஐ.பி.எஸ். படித்த ஒரு தேசிய கட்சியின், மாநில தலைவராக உள்ள அண்ணாமலை ஊடகவியலாளர்களை குரங்கு என்று கூறியதை ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மீண்டும் மீண்டும் வன்மையாக கண்டிக்கிறோம்.*
*உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், அப்படி தெரிவிக்கவில்லை என்றால் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துவதோடு, ஊடகவியலாளர்களை குரங்கு என்று அநாகரிகமாக பேசியதற்காக அனைத்து மாவட்டங்களிலும் வழக்கு தொடர்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறாக அவர்கள் தனித்தனியே வெளியிட்டுள்ள வெவ்வேறு அறிக்கைகளில் கூறியுள்ளார்கள்...
அண்ணா மலைக்கு கட்டம் சரியில்லையோ!




Comments