முதல்வராகயிருந்த ஓ.பி.எஸ், ஜெ.வுக்கு வெளிநாட்டில் ஏன் சிகிச்சை அளிக்கவில்லை! ஜெயக்குமார் கேள்வி?
- உறியடி செய்திகள்

- Nov 6, 2022
- 1 min read

ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, அப்போதைய முதல்வராகயிருந்த ஒ.பி.எஸ் சிகிச்சையளிக்கவில்லை? முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது
சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், மீண்டும் இப்போது, சசிகலாவிடமேசரணடைந்துள்ளார்.......
ஓ.பி.எஸ்,நடத்துவது தர்ம யுத்தம் 2.0 அல்ல, கர்ம யுத்தம். ஓபிஎஸ் அதிமுக அரசையே எதிர்த்து வாக்களித்துள்ளார்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையை உடைத்து, ஜெயலலிதாவின் அறையை காலால் எட்டி உதைத்துள்ளார்.
62 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பக்கம் உள்ளனர், 62 பெரியதா? 4 பெரியதா? எதிர்க்கட்சி துணை தலைவரை விதிகளை தூக்கிபோட்டுவிட்டு சபாநாயகர் அறிவிக்காமல் உள்ளார்.
திமுகவினர் ஒபிஎஸ்க்கு பின்புலமாக செயல்படுகிறார்கள்.......
ஓபிஎஸ் பேச்சை இனி யாரும் நம்புவதாக இல்லை, அவர் என்ன சொன்னாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போல தான் இருக்கும்.........

முதலமைச்சர் அதிகாரங்களை கவனித்து வந்த ஓபிஎஸ் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் சென்று உரிய மருத்துவ சிகிச்சை அளித்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார். ஆறுமுகசாமி ஆணையமும் அதையே தான் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது. விளம்பரத்தாலேயே,ஆட்சி நடக்கிறது.
அ.தி.மு.க. அரசின் மீது,நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது, எதிர்த்து ஓட்டு போட்டவர் ஓபிஎஸ், உப்பிட்டவருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ்” இப்போது எதிரணி என்கிறார்கள்....
இவ்வாறாக அவர் கூறினார்...




Comments