top of page
Search

தமிழ்நாட்டில், மெரினாவில் ஏன்? கலைஞரின் பேனா நினைவுச்சின்னம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jan 31, 2023
  • 2 min read

ree
ree

தமிழ்நாட்டில் ஐயன் வள்ளுவர் முதல் மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், எம்ஜிஆர் முதல் கி.ராஜநாராயணன் வரை அத்தனை ஆளுமைகளுக்கும் நினைவுச் சின்னங்கள், சிலைகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் என எண்ணற்ற அடையாளங்கள் தமிழ்நாடு அரசாால் அமைக்கப்பட்டுள்ளது.

இவை அத்தனையும் அரசு செலவில்தான் நிருவப்பட்டது.

அமைத்தவர் முத்தமிழறிஞர்,தலைவர் கலைஞர்.

ree

அண்ணல் அம்பேத்கர் பெயரில் பல்கலை தொடங்க அவர் பிறந்த மஹாராஷ்டிராவிலேயே முடியாமல் தவித்தபோது, இங்கே தமிழ்நாட்டில் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு அண்ணல் பாபாசாஹிப் டாக்டர் அம்பேத்காரின் பெயரை சூட்டியவர் தலைவர் கலைஞர்.


அண்ணா என்றால்

நூலகம், பெரியார் என்றால் பல்கலைகழகம், காமராஜர் என்றால் கல்வி தினம், எம்.ஜி.ஆர் என்றால் ஐந்து நாளும் சத்துணவில் முட்டை என அவரவர் இயல்புகேற்ப அடையாளம் இட்டு இனி வரும் காலமெல்லாம் அவர்களை மக்கள் இப்படிதான் நினைவு கூற வேண்டும் என பகுத்தறிவு சிந்தனை யோடு,வழி காட்டியவர் தலைவர் கலைஞர்.


ree

தன்னை அழிப்பேன் என சவடால்

விட்டவர்களுக்கும் அவர்தான் அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்தினார். நினைவுச்சின்னங்களை யும் ஏற்படுத்தினார்.

கலைஞர் தமிழ்நாட்டின் தனிப்பெரும் சாதனைகளின் அடையாளம். அரசியல் எதிரிகளும் மதிக்கக்கூடிய ஆற்றலை கொண்டவர். அவருக்கு வாக்களிக்காத மக்களும் கூட அவரை வணங்கத் தவறுவதில்லை. காரணம் தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சமின்றி பல நலத்

திட்டங்களையும்க் கொண்டு சேர்த்தார். கலைஞர் மரணமும், அன்றைய நிகழ்வுகளுமே ஒரு வரலாற்றுச் சாதனை. யாருடைய தயவாலும் அவர் மெரினாவில் (அடக்கம்) விதைக்கப்பட!செய்யப்படவில்லை. கலைஞர் எனும் தனி மனிதனின் மாபெரும் ஆளுமையைக் கருத்தில் கொண்டு, சரித்திரத்தில் முதன்முறையாக நள்ளிரவில் உயர்நீதிமன்றம் கூடி அந்த இடத்தை, அவரின் தமிழர், தமிழ்நாடு வளர்ச்சிக்காக அவரின் ஆற்றியப் பணிகளை நன்கு அறிந்தும் உணர்ந்தும் வழங்கி உத்தவிட்டது.

ree
ree

கலைஞர் அங்கே உறைந்திருப்பது அவர் சட்டப்படி பெற்ற உரிமை. எவருடைய கருணையாலும் பெற்றது அல்ல! சுமார் 75. ஆண்டுகாலமாக தமிழர்களுக்காகவும் மொழி இனத்திற்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் காக்க போராடிய தலைவர் கலைஞருக்கு . புகழாராம் சூட்ட வேண்டிய பொருப்பும் - கடமையும் தமிழர்கள் ஒவ்வெருவருக்கும் உண்டு என்றால் அது மிகையாது.

ree

இது கலைஞரின் அரசு. கலைஞரின் நினைவுச் சின்னத்தை சட்ட அனுமதியுடன் அமைத்தே தீரவேண்டிய கடமையும் பொருப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

ree

உங்கள் தலைவருக்கு சிலை வைக்க மக்கள் பணம் 80 கோடி செலவிடலாமா என கேட்கும் மேதாவிகளுக்கு! சில ஆண்டுகளுக்கு முன்எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வந்ததே! அதற்காக அரசு செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 120 கோடி ரூபாய். எதோ! 120 கோடியா? அந்த பணத்தில் உருவான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு நூலகம் எங்கே? விளையாட்டு அரங்கம் எங்கே? மருத்துவமனைகள் எங்கே? என தேடுகிறீர்களா? கிடைக்காது.

5 கோடியில் அவரது நினைவிடம் முன்பு ஒரு நினைவு வளைவு. மற்ற பணமெல்லாம் மாவட்டத்துக்கு ஒரு நூறாண்டு நினைவுக் கூட்டம் போட்டு தன்னை எம்ஜிஆரின் வாரிசாக எடப்பாடி முடி சூடிக் கொண்டார் என்பதுதான் அதிமுகவின் வரலாறு.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பந்தல் பில் மட்டும் 1.15 கோடி ஆனதாம்! இதை மறுப்பவர்கள் முன்வந்து எடப்பாடியாரிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

ree
ree

ஏன் கலைஞர் நினைவிடத்தில் நினைவுச் சின்னம்?

கலைஞர் என்பவர் ஒரு எழுத்தாளர். எழுத்தாளரும் நாடாள

முடியும் என நிறுவியவர். வாழ்நாள் எல்லாம் அரசியல், திரைப்படம், நாடகம், இலக்கியம், இலக்கணம் என எழுதிக் குவித்தவர். கல்விதான் சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் என அறிந்து கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவர். அவரது நினைவாக 100 அடி உயரத்தில் அவரது உருவச் சிலையை வைக்கவில்லை. மாறாக ஒரு

பேனாவை வைக்கப்படுகிறது அரசு. அந்தப் பேனா எப்போதும் கலைஞரை மட்டுமல்ல! தமிழ்நாடு என்பது ஓர் அறிவுச் சமூகம் என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்......

ree

ஏன் மெரினா? ஏன் கடலுக்குள்?

பல மாநிலச் சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடம். அவர்கள் நம்மை மதிப்பிடும் அளவுகோலாக பேனா. கடலுக்குள் 300

மீட்டர் நடைபாலம் அமைப்பதால் மக்களுக்கு புதிய அனுபவம், உற்சாகம் கிடைக்கும். சுற்றுலாப் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். எனவேதான் உலகெங்கும் நாடுகளில் கண்ணாடி நடைபாலங்கள் அமைப்பப்பட்டு வருகிறது.

மேலும், அந்தப் பகுதி மக்களின் கருத்தை அறியதான் கருத்துக் கேட்புக் கூட்டமே தவிர

எவருடைய அரசியல் முழக்கங்களுக்கான ஆன மேடை அல்ல!

அது. மெரினா பகுதி வாழ் மக்களின் கருத்தே இங்கு முக்கியம். சுற்றுலா பயணிகள் அதிகரிப்பதின் மூலம் அவர்களுக்கும் அதில் பலனுண்டு.

மற்றத் தலைவர்களுக்கு மக்கள் பணத்தில் பொது இடங்களில் நினைவுச் சின்னங்கள், மணி மண்டபங்கள் எழுப்பப்பட்ட

பொதெல்லாம் வராத ஆத்திரம்-எரிச்சல் கலைஞருக்கு எனும் போது மட்டும் பொத்துக் கொண்டு வருகின்றது என்றால் அது அவர்களின் அடிமனதில் இருக்கும் சாதிய வன்மத்தை தவிர வேறில்லை. இவைகளை எதிர்கொள்ள தி.மு.கழகத்திற்க்கும் தெரியும். தமிழர்களுக்கும் தெரியாமலில்லை

ree

பேனா நினைவுச்சின்னம், நிச்சயம்கலைஞரின் பெயரைச் சொல்லப் போகிறது. மறைந்த பின்பும் மக்கள் பயன்பாட்டுச் சின்னங்களாக என்றும் வாழப் போகிறார் முத்தமிழறிஞர் கலைஞர். இதை செய்வது நன்றியுள்ள தமிழ்ச் சமூகத்தின் கடமை. தமிழ்நாடுஅரசு அதனைசெய்யும்.

இதைக் காணவே தனது ஒவ்வொரு ரத்த அணுக்களிலும் கலைஞரைச் சுமந்து கொண்டிருக்கிற. தமிழ் சமூகமும், திராவிட இன சமூக மக்களும். எதிர்பார்த்து கொணடுள்ளார்கள்.


ஏனெனில் தமிழ்ச் சமூகமும், திராவிட இன மக்களும் நன்றி உணர்வுமிக்கவர்கள்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page