அரசியல்நாகரீகமின்றி வன்முறையை தூண்டி - பேசியசசிகலாபுஷ்பவை கைது செய்யாதது ஏன்? வலுக்கும்கண்டனங்கள்!!
- உறியடி செய்திகள்

- Dec 23, 2022
- 1 min read

அமைச்சர் கீதாஜீவனுக்கு காலை வெட்டுவேன் என கூறிய பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவை கைது செய்யாது ஏன் : தேசிய முன்னேற்ற கழகம்
நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள அறிக்கை :
இது குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உலாவரும் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது....
தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் டிச21-ம் தேதி நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா பேசும் போது, எங்கள் தலைவன் ஒன்று சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி கோர்ட் வாசலில் உங்களை போல் நிற்கவில்லை என அநாகரீகமாக பேசியிருக்கிறார்.
சகோதரி சசிகலா புஷ்பா ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர் கீதா ஜீவன் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்துவிட்ட நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் மீது அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டுமென சசிகலா புஷ்பாவை தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்......
இல்லையென்றால் சசிகலா புஷ்பா மீது திராவிட முன்னேற்ற கழகத்தின் தோழை கட்சி என்ற அடிப்படையில் தேசிய முன்னேற்ற கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்பதை சசிகலா புஷ்பாவிற்கு சொல்லி கொள்கிறோம்.
கீதா ஜீவன் கால், மற்றும் நாக்கை வெட்டுவோம். தாங்கள் வீட்டில் இருந்து கிளம்ப முடியாது என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் இப்படி அமைச்சர் ஒருவரை அதுவும் பெண் அமைச்சரை கொலை மிரட்டல் விடுத்து சசிகலா புஷ்பாவின் பேச்சுக்கு தேசிய முன்னேற்ற கழகம் கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறது.
சசிகலா புஷ்பா நீங்கள் யார் எப்படிப்பட்டவர் என்பது அரசியல் நாகரீகம் கருதி பேச வேண்டாம் என நினைக்கிறோம். கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு பொதுமக்கள் மத்தியில் இப்படி கேவலமான அரசியல் பேசுவது ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு கிடையாது. அதற்காக அரசியல் மேடை இருக்கிறது.
அமைச்சர் கீதாஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா போன்று அரைகுரை அரசியல்வாதிகளை தமிழக காவல்துறை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறாக அவர் கூறியுள்ளார்.




Comments